Hina ki kushboo

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காதல், துள்ளல், ரகளை, அட்டகாசம், குதூகலம் எல்லாம் ஒருங்கே இந்தப் பாடலில்.  கேட்டால் ஆடாமல் இருக்கவே முடியாது.  

ஜெயமோகன், எஸ்.ரா. பல்கலைக்கழகத் துணைவேந்தராக வேண்டும்: அடியேன் கோரிக்கை

அரசாங்கத்திடம் என்ன கோரிக்கை வைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.  ஜெயமோகனையும், எஸ். ராமகிருஷ்ணனையும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக ஆக்க வேண்டும் என்று சொன்னேன்.  மனுஷ்ய புத்திரன்?  நம் கோரிக்கை இல்லாமலேயே ஆகி விடுவார். பகுதி 1 பகுதி 2  

உலகம் தாங்காது… மனுஷ்ய புத்திரன் கருத்து

மனுஷ்ய புத்திரன், முகநூலில்: அந்த காலத்தில் ஞானிகள், ரிஷிகள் இருந்தார்கள். அத்தகைய ஞானத்தை வழங்கும் நவீன ஞானிகளாகவும் ஆசான்களாகவும் திகழ்பவர்கள்தான் இன்றைய எழுத்தாளர்கள். – சாருநிவேதிதா (நியூஸ் 7) ஜெயமோகனை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு எழுத்தாளர்களை வரையறுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னையெல்லாம் ரிஷி என்றால் உலகம் தாங்குமா? ***  

நியூஸ் 7 தொலைக்காட்சியில் இன்று மாலை…

இன்று மாலை ஏழு மணிக்கு  நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பேசுகிறேன்.  எழுத்தாளர்களுக்கு ஒரு அரசாங்கம் என்னென்ன செய்யலாம் என்பது பற்றிப் பேச இருப்பதால் சுவாரசியமான மனநிலை ஏற்படுகிறது.  நிகழ்ச்சியின் பெயர் களம் 2016.  உபதலைப்பு வேட்பாளர் பெருமக்களே!   அவசியம் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.