விழா பதிவுகள் – 14

நண்பர் கிருஷ்ணமூர்த்தி முகநூலில் எழுதியது. ஒவ்வொரு ஆண்டும் நான் மறக்காமல் செல்லும் ஓர் இலக்கிய விழா சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீடு. சாரு நிவேதிதாவுடைய நூல்களின் வழியே வாழ்க்கை சார்ந்த அறிதலை படிப்பினையாக கொண்டாலும் அதையும் தாண்டி அவரை மையமாக வைத்து எனக்கு கிடைத்த நட்புகள் பல. இன்றளவும் அந்த நட்புகள் என்னுடன் ஆழமாக பிணைந்து இருக்கின்றன. இவையெல்லாமே சங்கமமாகும் இடமாகவே சாருவின் நூல் வெளியீட்டை ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன். ஏதோ ஒரு நெருடல் ஒவ்வொருமுறையும் என்னை … Read more

விழா பதிவுகள் – 13

ஒரு ஆன்மீக விழா மாதிரி இருந்தது என்றாள் அவந்திகா.  எனக்கு யுவ கிருஷ்ணாவின் ஞாபகம் வந்தது. (அறம் பொருள் இன்பமுமா பிடிக்கவில்லை, யுவ கிருஷ்ணா?) மனுஷ்ய புத்திரனின் ஞாபகமும் வந்தது. ஒருவேளை திருப்பூர் கிருஷ்ணன், லெனின் ஆகியோருடன் சேர்ந்து மனுஷும் ஆன்மீகவாதியாகி விட்டாரா?  இருக்காதே?  அவ்வளவு சீக்கிரம் சாத்தான் தெய்வமாகி விட முடியுமா?  எப்படியோ, கார்ல் மார்க்ஸும் அதே விஷயத்தைத் தொட்டிருக்கிறார்.  கார்ல் மார்க்ஸின் முகநூல் பதிவு இது: சாரு புத்தக வெளியீட்டு விழா: விழாவில் முதலில் … Read more

விழா பதிவுகள் – 12

விழா முடியும் போது மணி 9.35.  நான் எட்டு மணிக்கும் பிறகு ஒன்பது மணி அளவிலும் பேசினேன்.  எட்டரை மணிக்கு நான் பேசி முடித்ததும் கணேசன் அன்பு வட பழனி கிளம்பி விட்டார்.  அவர் கிளம்பியது எனக்குத் தெரியாது.  அங்கே நாங்கள் பத்தரைக்கு வருவதற்குள் பதினைந்து பேருக்குக் கோழி பிரியாணி தயாரிக்கும் வேலையில் இறங்கி விட்டார்.  அவருக்கு உதவி முருகன் கடற்கரை.  நான் பனிரண்டு மணிக்கே உறங்கச் சென்று விட்டதால் பிரியாணிக்கு முன்னதாக சோறும் கோழிக் குழம்புமாகப் … Read more

விழா பதிவுகள் – 11

நண்பர் யுவ கிருஷ்ணா முகநூலில் எழுதியிருப்பது: போன வார இறுதி ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழா. ஓர் இலக்கிய விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொள்வது அரிதிலும் அரிதான நிகழ்வு. இத்தனைக்கும் அன்று இந்தியா – பாகிஸ்தான் மோதிய டி20 கிரிக்கெட் போட்டி வேறு. சாருவின் புத்தக வெளியீடுகளில் 90% இளைஞர்கள்தான் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவும் விதிவிலக்கல்ல. இணையத்தளங்களில் அவர் மீது வெளிப்படும் வன்மம் எவ்வளவு போலியானது என்பதை ராஜா அண்ணாமலை … Read more

விழா பதிவுகள் – 10

ஹாய் சாரு, இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் பார்ப்பதா, இலக்கிய விழாவிற்கு போவதா என்று குழம்பி, நாஞ்சில்நாடனின் இந்த வரி “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” மனசாட்சியை உறுத்த விழாவிற்கு வந்தேன். ஒரு இலக்கிய விழாவிற்கு இவ்வளவு பேர் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. நீங்கள் சிறந்த பேச்சாளராகி விட்டீர்கள். விழாவில் பேசிய மற்ற அனைவரையும் விட உங்களது பேச்சு அருமையாக இருந்தது. முதல் இரண்டு நிமிடம் … Read more