ஒன்பது புத்தகங்கள் என்னென்ன?

ஒன்பது புத்தகங்கள் என்னென்ன என்பதில் எந்த ரகசியமும் இல்லை.  அது பற்றி எழுத எனக்கு நேரமில்லை. தினமணி இணைய இதழில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் என் ஞாபகத்திலிருந்து எழுதவில்லை.  ஒவ்வொரு எழுத்தாளரின் புத்தகங்களையும் மீண்டும் படித்து விட்டே எழுதுகிறேன்.  எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்தது.  இப்போது நான்கு தினங்களுக்குள் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் இரண்டையும் அடுத்த வாரத்தில் ஆதவன் எழுதிய சிறுகதைகளையும் படிக்க வேண்டும். … Read more

காதலர் தினம் : ஜி. கார்ல் மார்க்ஸ்

நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் கணேசகுமாரனின் “மிஷன் காம்பவுண்ட்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. சாரு நிவேதிதாவும், ராஜசுந்தரராஜனும் மற்றும் பலரும் பேசினார்கள். ராஜசுந்தரராஜன் தனது உரையில் ‘Status quo’ என்றால் என்ன (“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கு எதிர்நிலை) என்பது குறித்த தத்துவ அடிப்படையையுடன் உரையைத் தொடங்கினார். சாரு பேசியபோது, இந்த Status quo அடிப்படையின் சமகால உதாரணங்களுடனும் அன்பை முன்னிறுத்தும் எழுத்தென்பது எவ்வாறு வன்முறையை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது என்றும் “உன்னுடைய … Read more

கணேச குமாரனின் மிஷன் காம்பவுண்ட்

கணேச குமாரனின் மிஷன் காம்பவுண்ட் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நேற்று காலை பதினோரு மணி அளவில் நடந்தது.  நானும் கார்ல் மார்க்ஸும் சரவணனும் சென்றிருந்தோம்.  பத்து மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லியிருந்ததால் பப்புவுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு, ஸோரோவுக்கு உணவு கொடுக்க நேரமில்லாமல் ஒன்பதரை மணிக்கே கிளம்பி விட்டேன்.  ஸோரோவுக்கு உணவு கொடுப்பது எளிதல்ல.  பத்துப் பதினைந்து நிமிடம் பிடிக்கும்.  ஒன்பதரைக்குக் கிளம்பினால் பத்து மணிக்கு கே.கே. நகர் (என்ன ஒரு ’அழகான’ பெயர்!) … Read more

காதலர் தினம்

இன்றைய தமிழ் வாழ்க்கை இரண்டு முக்கியமான கற்பிதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  ஒன்று, பழம் பெருமை.  இரண்டு, ஹைப்பர் ரியாலிட்டி என்ற மிகை எதார்த்தம்.  வீரம், காதல், அதிகாரம், பண்பாடு என்று எதை எடுத்தாலும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் விடுகிறது தமிழனின் சிந்தனை.  இது ஒரு பக்கம் இருக்க, மிகை எதார்த்தம் என்பது நம்முடைய வாழ்க்கையை நாமே வாழாமல் வேறு யாரோ வாழ்வதை திரையில் நிழல்களாகப் பார்த்து  அதை நம்முடைய மண்டைக்குள் திணித்துக் கொண்டு அந்த … Read more