சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே!

தலைக்கு மேலே வேலைகள் காத்துக் கிடப்பதால் பத்மஸ்ரீ விஷயம் பற்றி எதுவும் எழுதவில்லை.  இப்போது டாக்டர் ஸ்ரீராம் இது பற்றி ஜெயமோகன் மீண்டும் எழுதியதன் இணைப்பை அனுப்பியிருக்கிறார்.  அவசரமாக சில லிபிய நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் இது பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதித் தான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.  முதலில் ஜெயமோகனின் பதிவு. http://www.jeyamohan.in/83865#.Vq9jWfl97IU  ஜெ.யின் அந்த விளக்கத்தில் ”முதல்முறையாக சிற்றிதழ்சார்ந்த ஒருவரை தேசியகௌரவம் தேடிவருகிறது. அது நிராகரிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்று சாரு … Read more

கோபி கிருஷ்ணன் – பழுப்பு நிறப் பக்கங்கள்

பழுப்பு நிறப் பக்கங்களுக்கு தினமணியின் பார்த்தசாரதி, ச.ந. கண்ணன், உமா ஷக்தி ஆகிய மூவரும் கொடுத்து வரும் ஊக்கம் எனக்குப் பெரிதும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.  அவர்களுக்கும் இந்தப் பத்திக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து உதவும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.  ஃபெப்ருவரி 27 (சனிக்கிழமை) வெளியீட்டு விழாவை மறந்து விடாதீர்கள்.  மாலை ஆறரை மணி.  ராஜா அண்ணாமலை மன்றம், ப்ராட்வே (எஸ்பிளனேட்), பல் மருத்துவக் கல்லூரி அருகில், ஃபோர்ட் ரயில்நிலையம் எதிரே.  திருப்பூர் கிருஷ்ணன், … Read more

சிறுதெய்வ வழிபாடு

ஆறு மாதங்களுக்கு முன்பு நானும் டாக்டர் ஸ்ரீராமும் திருநெல்வேலி சென்றிருந்தோம்.  அது பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.  நேரமின்மையின் காரணமாக பல விஷயங்களை எழுத முடியவில்லை.  ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.  ஒரே ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்.  ஸ்டாலின் குணசேகரன் சிறுதெய்வம் அல்ல.  பெருந்தெய்வங்களோடு சேர்ந்து விட்டார்.  கட்டுரையைப் படித்துப் பாருங்கள். http://sriramintamil.blogspot.in/2016/02/blog-post.html