விழா பதிவுகள் – 8

இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.  வலது கோடியில் ஒருவர், இடது கோடியில் ஒருவர் ஆகிய இருவரைத் தவிர மற்றவர் அனைவரின் வயதும் எத்தனை இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

விழா பதிவுகள் – 7

பெரும்பத்திரிகைகளில் எழுதாத, உயிர்மை, அந்திமழை போன்ற சிறுபத்திரிகளிலும் ப்ளாகிலும் எழுதும் ஒரு எழுத்தாளனான அடியேனின் புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமான காமராஜர் அரங்கிலும் ராஜா அண்ணாமலை மன்றத்திலும் தொடர்ந்து ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து வருவதற்குக் காரணம் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள்தான்.  வெளியிலிருந்து பார்த்தால் புத்தக வெளியீடா, அரசியல் மாநாடா என்று சந்தேகமாக உள்ளது.  அநேகமாக இப்படிப்பட்ட ஒரு புத்தக வெளியீடு இத்தனை பெரிய அரங்கங்களில் நடப்பது உலக அளவிலேயே நம்முடைய வாசகர் வட்டத்தின் மூலமாக சென்னையில் … Read more

விழா பதிவுகள் – 6

என் மூன்று பிள்ளைகள்.  வெளிநாடுகளில் வசிக்கும் நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ் மூவரும் இந்த விழாவுக்காகவே வந்திருந்தனர்.  நிர்மல் முந்தின இரவு அங்கிருந்து கிளம்பி மாலை சென்னை வந்து விழா முடிந்ததும் அன்று நள்ளிரவே திரும்பவும் கிளம்பி விட்டார்.  தூங்கி 24 மணி நேரம் ஆகிறது என்றார். இவர்களுக்கெல்லாம் என் எழுத்தைத் தவிர தருவதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லை.  இதேபோல் தில்லியிலிருந்து வந்திருந்த தரணீஷ்வரும் நிகழ்ச்சி முடிந்ததுமே தில்லிக்கு ரயில் பிடிக்கக் கிளம்பி விட்டார்.  மூன்று … Read more

நெஞ்சோரத்தில்…

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு நல்ல பாடலைக் கேட்கிறேன்.  பாடலைப் பாடிய சுப்ரியா ஜோஷி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெங்களூர் பெண் என்று தெரிந்தது.  இனிமையான குரல்.  விஜய் ஆண்டனியின் இசை.    

மேற்கு ஐரோப்பாவிலும் விஷம்

சுவிட்ஸர்லாந்து என்பது எப்பேர்ப்பட்ட சொர்க்க பூமி!  அங்கே இருந்து கொண்டு ஒருவரை – அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமாரை பற நாயே என்று முகநூலில் திட்டுகிறார் என்றால் சுவிட்ஸர்லாந்தையும் இம்மாதிரி ஆசாமிகள் எந்த அளவுக்கு விஷமாக்குகிறார்கள் என்று பாருங்கள்.  ஒருவரை அகதியாக ஏற்றுக் கொண்டு அவருக்கு இந்தியா போன்ற நாடுகளில் கனவு கூட காண முடியாத அளவுக்கு, இங்கே வாழும் சராசரி மனிதர்களின் வாழ்க்கையை விடப் பல மடங்கு சிறந்த வாழ்க்கையை நல்கும் … Read more

விழா பதிவுகள் – 5

அன்புள்ள சாரு, இதை எங்கு பதிப்பது என்று தெரியவில்லை. ஆகவே உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன். சென்னை ஒரு சுவாரஸ்யமான நகரம். எல்லோர் ஆசாபாசங்களுக்கும், அபிலாஷைகளுக்கும்,  ஆர்வத்துக்கும் எப்பொழுதும் தீனி போடுமிடம். நேற்று மாலை ராஜா அண்ணாமலை மன்றம் சாருவின் வாசக இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது! அசோகமித்திரன் தன் தள்ளாத வயதிலும் தடியூன்றி நடந்து வந்தார். எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், சமஸ், திருப்பூர் கிருஷ்ணன், எடிட்டர் லெனின், டாக்டர் சிவகடாட்சம், அவர் மனைவி, நாகூர் ரூமி என்று ஏகப்பட்ட … Read more