நுழைவுச் சீட்டு

  நான் புத்தக விழாவுக்குச் செல்வது புத்தகம் வாங்க அல்ல.  நான் தேடும் புத்தகங்கள் சர்வதேசப் புத்தக விழாக்களில்தான் கிடைக்கும்.  மற்றபடி என் வீட்டுக்கு மிக அருகில் உள்ள உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, நற்றிணை பதிப்பகங்கள் மூலமே எனக்கு வேண்டிய தமிழ் நூல்களை வாங்கிக் கொண்டிருக்கிறேன்.  நண்பர்களும் ஆன்லைன் மூலம் வாங்கித் தருகின்றனர்.  நான் தினந்தோறும் புத்தக விழாவுக்குச் செல்வது என் நண்பர்களைப் பார்ப்பதற்கும் வாசகர்களுக்குக் கையெழுத்துப் போடுவதற்காகவும்தான். ஒருநாள் டிக்கட் வாங்கப் போனேன்.  500 ரூபாய்க்கு … Read more

அந்திமழை

இம்மாத அந்திமழை அச்சு இதழில் தன்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க ஆரம்ப காலங்களில் பட்ட கஷ்டங்கள் பற்றி சாருவின் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 3)

சு.ரா.வினால்தான் நான் சினிமாவுக்கு வசனம் எழுதப் போகவில்லை. போனால் பல குப்பைகளை நான் உலக கிளாசிக் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். பொய் சொன்னால் நான் ஜகுவார் காரில் போகலாம். ஆனால் தூக்கம் வராதே? அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தைக் கற்பித்தார். இந்த இரண்டு ஆசான்களையும் நான் வணங்குகிறேன். http://bit.ly/1VFWyIP

இறைவி விமர்சனம்?

இறைவி விமர்சனம் எங்கே என்று பத்து இருபது பேர் மின்னஞ்சல்.  இறைவியை மலக் கிடங்கு என்று சொன்னதால் அடிப்பேன் உதைப்பேன் என்ற மிரட்டல் பல.  தமிழ்நாட்டில் நீங்கள் கருணாநிதியை விமர்சிக்கலாம்; ஜெயலலிதாவை விமர்சிக்கலாம்.  ஆனால் சினிமாவில் ஈடுபட்டிருப்போரை விமர்சித்தால் அடி உதைதான் கிடைக்கும்.  அல்லது, அதற்கு சமமான ஏச்சு பேச்சுகள் மிரட்டல்கள் கிடைக்கும்.  ஏனென்றால் தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம். ஏஷியாநெட் மின்னிதழில் நான் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கலாம்.  அந்த இதழில் சினிமா … Read more