பிக் பாஸ் – சினிமாக்காரர்களின் திமிர்த்தனம் : அராத்து

  சில எபிசோட்கள் பார்த்தேன். ஊரோடு த்து வாழ வேண்டியுள்ளதே ! முதலில் ஏன் ஒருவரைத் தவிர எல்லோரையும் சினிமா சம்மந்தப்பட்டவர்களாகவே தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது ரியாலிட்டி ஷோ அல்ல , ஸ்க்ரிப்ட் படிதான் நடக்கிறது என்ற குற்றச்சாட்டும் காணக்கிடைக்கிறது. ஸ்கிரிப்ட் ஆக இருந்தாலுமே , சினிமாக்காரர்களின் திமிர்த்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஜூலியை , ஆர்த்தியும் , காயத்திரியும் நக்கல் அடித்து , கேலி செய்வது படு ஆபாசமாக இருக்கிறது. காயத்திரியிடம் தெரிவது அசட்டு பிராமணத் … Read more

சுஜாதாவின் தொடர்

தமிழில் வெகுஜன எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.  அது வேறு; இது வேறு.  ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியம் வரும்.  லா.ச.ரா.வின் எழுத்து முழுக்கவும் வெகுஜனப் பத்திரிகைகளில் வந்தவைதான்.  அசோகமித்திரனின் எழுத்தும்தான்.  இந்திரா பார்த்தசாரதி அநேகமாக கல்கியில் எழுதினார்.  மற்றபடி வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் பொழுதுபோக்கு எழுத்தை என்னால் ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை.  அதற்கு ஒரே ஒரு விதிவிலக்காக இருந்தவர் சுஜாதா மட்டுமே.  காரணம், அவர் எழுத்து வெறும் வணிக எழுத்து என்று ஒதுக்கித் தள்ள முடியாமல் … Read more

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்… : மனுஷ்ய புத்திரன்

நண்பர் தியோடர் பாஸ்கரன் வாட்ஸ் அப்பில் மனுஷ்ய புத்திரனின் பிக் பாஸ் கவிதையை அனுப்பியிருந்தார்.  இல்லையெனில் இந்தக் கவிதையை நான் படித்திருக்க வாய்ப்பில்லை.  இதை இந்தத் தளத்தில் வெளியிடலாமா என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.  ஏனென்றால், இதுவரை பிரசுரம் ஆகாமல் இருந்தால் நாம் முதலில் வெளியிட முடியாது.  ஆனாலும் இதை உடனடியாக எல்லோரும் படித்தாக வேண்டுமே என்றும் எண்ணினேன்.  அதனால் முடிந்தவரை என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன்.  இன்று மற்றொரு நண்பர் இந்தக் கவிதை உயிர்மையில் … Read more