என் புத்தகங்கள்

பல ஆண்டுகளாக என் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று ஒரு புகார் இருந்துகொண்டே இருந்தது.  நானும் அவ்வப்போது பதிப்பாளர்கள் மீது கொஞ்சம் மனத்தாங்கலில் இருப்பேன்.  ஆனால் மளிகைக்கடை, சாப்பாட்டுக் கடை வாசலில் வைத்து விற்றால் கூட இரநூறு பிரதிதான் கணக்கு என்று தெள்ளத் தெளிவாக சொல்கிறது தமிழ் சமூகம்.  நானும் வாங்கினா வாங்குங்க இல்லாட்டிப் போங்க என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.  ஆனால் புத்தக விழாக்களில் வாங்குகிறார்கள்.  தினமும் இருநூறு புத்தகங்களில் கையெழுத்துப் போட்டேன்.  அது ஒரு நல்ல … Read more