பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 3)

நவீன தமிழ் உரைநடையின் முன்னோடிகள் என பாரதி, வ.வே.சு. ஐயர், மாதவையா போன்றவர்களைச் சொல்லலாம். அதற்கு அடுத்து தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் சென்றவர்களில் அதிமுக்கியமானவர்கள் கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, வ.ரா., புதுமைப்பித்தன். முப்பதுகள், நாற்பதுகளில் நடந்த இந்தத் தமிழ் உரைநடை மறுமலர்ச்சியில் பிரதானமான இடம் கு.ப.ரா.வுக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் படிக்க: http://bit.ly/28USX6h

அழகின் பேருரு…

பஞ்சாபி மொழியிலும் குடி என்றால் போதை தான்.  ஆனால் மது போதை அல்ல.  குடி என்றால் பெண்.  பஞ்சாபியின் மிக அழகான வார்த்தைகளில் ஒன்று, குடி.  உட்தா பஞ்சாப் படத்தில் வரும் இக் குடி என்ற இந்தப் பாடலை இதோடு 500 தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன்.  இந்தப் பாடலை ஆலியா பட்டும் பாடியிருப்பது இப்போதுதான் தெரிந்தது.  இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் எப்படியோ அப்படித்தான் ஆலியா பட்.  பேரழகி என்ற வார்த்தையெல்லாம் அவரை அவமானப்படுத்துவது போல.  கடவுள்.  கடவுள்.  அழகின் … Read more

ராமன் ராகவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுராக் காஷ்யப்பின் படத்தைப் பார்க்கப் போகிறேன்.  நாளை. அசோகமித்திரனுக்கும் அனுராக் காஷ்யப்புக்கும் ஒரு ஒற்றுமை.  அ.மி.யிடம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் கல்கி என்பார்.  ஆனால் அசோகமித்திரனோ காஃப்கா, கம்யு போன்றவர்களை விட பெரும் சாதனையாளர்.  அதேபோல் அனுராக் காஷ்யப்புக்குப் பிடித்த இயக்குனர் பாலா.  அவர் தயாரிப்பில் உருவான உட்தா பஞ்சாபும் கொடுமை.  ஆனால் அனுராக் காஷ்யப்பினால் ஒரு மோசமான படைப்பை உருவாக்கவே முடியாது.  அவருடைய கடைசி படமான பாம்பே … Read more

உலகின் மிகச் சிறந்த நாவல்

பா. வெங்கடேசனை 20 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவேன்.  ஹொகனேக்கல்லில் நடந்த இலக்கியச் சந்திப்பில் அவரோடு நிறைய உரையாடியிருக்கிறேன்.  அவருடைய குரல் மிகவும் வித்தியாசமாக ஒரு பாடகனின் குரலைப் போல் தனித்து ஒலிக்கும்.  ஆளும் கெச்சலாக இருப்பார்.  தமிழவன், எஸ். சண்முகம் குழுவைச் சேர்ந்தவர் என்பதாக என் மனதில் பதிந்திருந்தார்.  அந்தக் குழுவின் மீது எனக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது.  கலாரசனை இல்லாதவர்கள் என்று எண்ணம்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு உயிர்மை கூட்டத்தில் தமிழவனை சந்திக்க … Read more

மரணத்தோடு பகடையாடியவன்…(2)

அன்புள்ள சாரு, கவிஞர் குமரகுருபரன் மறைவும் அதை ஒட்டி இலக்கியப் பரப்பில் நிகழ்ந்து வரும் விவாதங்களையும் அறிவீர்கள். குமரகுருபரனைத் தங்கள் வலைத்தளத்தில் தாங்கள் அறிமுகப்படுத்தியதில்தான் அறிவேன்.  இச்சூழ்நிலையில் பல கேள்விகள் மனதை நிலையிழக்கச் செய்கின்றன.  அதீதத்தின் கரங்களுக்குள் ஒரு மனிதனை இட்டுச் செல்வது எது? வாழ்வில் எதனால் ஒரு மனிதன் அதீதத்தால் ஆட்கொள்ளப்பட்டு அழிவிற்குள்ளாகிறான்? அன்பும் பண்பும் மிக்கவர்களுக்கே இந்த நிலை வாய்ப்பது எதனால்? அவருக்குள் இருந்த கோபம் எதன் மேல்? எதற்காக? அந்த ஆறாத சினம் … Read more