வைரமுத்து – 2

ஒரு தொலைபேசி உரையாடலில் தேவதாசி என்பதற்கு உயர்ந்த அர்த்தம் இருந்ததாகவும் பின்னர் நிலவுடைமைச் சமுதாயத்தில்தான் அதற்கு இழிவான அர்த்தம் ஏற்பட்டு விட்டதாகவும் குறிப்பிடுகிறார் வைரமுத்து. சரி. நாம் இப்போது என்ன மன்னராட்சியிலா இருக்கிறோம்? ஜனநாயகம்தானே? மன்னர் ஆட்சியில் மன்னர் கடவுளுக்குச் சமம். மக்கள் அடிமைகள். அப்படிப்பட்ட மன்னராட்சி சொல்லாடலான கவிப் பேரரசு என்ற பட்டத்தை ஏன் அவர் சுமந்து கொண்டிருக்கிறார்? 2. எவரையும் ஜாதி சொல்லிக் குறிப்பிடக் கூடாது. திட்டக் கூடாது. சட்டப்படி குற்றம். அப்படி இருக்க, … Read more

வைரமுத்துவைக் கைது செய்யுங்கள்…

ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியிருப்பதைக் கேட்டேன். திட்டமிட்டுத்தான் பேசியிருக்கிறார். ஏனென்றால், அது பேச்சு அல்ல. எழுதிப் படிக்கிறார். யாரோ ஒரு முட்டாள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தாராம், ஆண்டாள் தாசி என்று. என்னடா என்று பார்த்தேன். கடவுளைக் காதலனாகக் கற்பித்துப் பாடியதால் தாசியாம். அட அறிவுக் கொழுந்துகளா… கடவுளைக் காதலனாக நினைத்துப் பாடுவது நாயக – நாயகி பாவம் என்பது கூடவா கவிப் பேரர்ஜவுக்குத் தெரியவில்லை? கடவுளைக் காதலனாக வரித்தால் தாசியா? அந்த அமெரிக்க ஆய்வாளரைப் பார்த்தால் … Read more

ஆண்டாள் – திருவள்ளுவர்

வைரமுத்து ஆண்டாள் பற்றி ஏதோ சொன்னதாக ஒரே அல்லோலகல்லோலமாக இருக்கிறது. அவர் என்ன சொன்னார், எந்தப் பத்திரிகையில் அது வெளியாகி இருக்கிறது என்று யாரேனும் லிங்க் தர முடியுமா? நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் விவாதம் செய்ய என்னை அழைத்தார்கள். வைரமுத்து அப்படியெல்லாம் உளறி இருக்க மாட்டார் என்றே சொன்னேன். ஆனால் புகழ் முற்றி விட்டால் போதைதான். சினிமாக்காரர்களையே எப்போதும் துதிபாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாளைக்கு எந்தப் பாடலாசிரியராவது அல்லது … Read more

‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ – எம். ரிஷான் ஷெரீப்

அன்பின் நண்பருக்கு,      இன்று இந்தியா,சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் எனது புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது. என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. எனது ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட,  உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க சிறுகதைகள் குறித்த வாசிப்பில், மனதை பெரிதும் ஈர்த்தவையும், … Read more