ராஸ லீலா

  ராஸ லீலா என்ற என்னுடைய நாவல் சரியானபடி வாசகர்களைச் சென்றடையவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.  அதை இப்போது சரி செய்து விடலாம்.  அதன் இரண்டாம் பதிப்புக்கு இப்போது நான் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  சுந்தர் ஸ்ரீனிவாஸ் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார், ராஸ லீலாவுக்குத் தனியாக ஒரு ரீடர் போடலாம் என்று.  ரீடர் என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு புத்தகத்தை எப்படிப் படிப்பது என்ற பயிற்சியை அளிக்கும் நூல் என்றும் ஒரு பொருள் … Read more

தேவகானம்

முதலில் இவரைக் கேளுங்கள்.  இதுவரை என் வாழ்நாளில் இவ்வளவு அற்புதமான இசைக் கலைஞனைக் கேட்டதில்லை.  இசைக் கடவுள்.  நாளை விரிவாக எழுதுகிறேன்… மின்விசிறி சத்தம் கூட இல்லாமல் மிக நிசப்தமான சூழலில் கேட்கவும். முக்கியமாக Divenire என்ற பாடல்.  இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம் போல் இருக்கிறது.  அற்புதம்.  அற்புதம்.  அற்புதம். https://www.youtube.com/watch?v=MmMnYM9DoEc  

அடியேனைப் பற்றி அவந்திகா

ட்ராகுலா படம் பார்த்திருப்பீர்கள்.  ட்ராகுலா யாரையாவது கடித்தால் அவர்களும் ட்ராகுலாவாக ஆகி விடுவார்கள்.  என்னுடைய 15 வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  என்னோடு கூட இருப்பவர்களும் என்னைப் போலவே எழுத்தாளர்களாகி விடுகிறார்கள்.  2005-இல் எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்த போது கலா கௌமுதி, மாத்ரு பூமி, மாத்யமம் என்ற மூன்று மலையாள வாரப் பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.  அறுவை சிகிச்சையின் காரணமாக மூன்று பத்திரிகைகளிலும் இடைவெளி வருவதை நான் விரும்பாததால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே … Read more