3. இசை பற்றிய சில குறிப்புகள்

நாவல் வேலை சுணங்குகிறது என்ற காரணத்தால்தான் இசையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறேன்.  கர்னாடக சங்கீதத்தில் எனக்குப் பிடித்த மேதைகள் அநேகம்.  அவர்களில் தலையாயவர் வீணை எஸ். ராமநாதன்.  என்ன வீணை எஸ். ராமநாதனா, அவர் பாடகர் அல்லவா என்று கேட்பார்கள்.  இங்கே எம்.டி. ராமநாதன் பிரபலம் என்பதால் பலருக்கும் எஸ். ராமநாதன் தெரியாமலே போய் விட்டார்.  இன்னொரு காரணம், இந்தத் தமிழ்நாட்டுச் சூழல் பிடிக்காததால் எஸ்.ராமநாதன் அமெரிக்கா சென்று விட்டார்.  அவர் அற்புதமான பாடகர், வீணைக் கலைஞர்.  … Read more

167. கலைஞனின் உன்மத்தம்

அருட்செல்வப் பேரரசன் மொழிபெயர்த்த மஹாபாரதத்துக்கு ஒரு வெளியீட்டு விழா வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  சில நண்பர்கள் கூட இருந்தனர்.  நான் எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவதுதான் என் நண்பர்களின் வழக்கம்.  அந்த நண்பர் குழாமில் அப்போது இன்னொரு நண்பரும் இருந்தார்.  அவர் தீவிர இந்துத்துவச் சார்பு உள்ளவர்.  என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவர் என்பதால் அரசியல் தவிர்த்து மற்றவற்றைப் பேசிக் கொண்டிருப்பேன்.  சுவாரசியமாகப் பேசுபவர்.  விஷயதாரி.  சமய இலக்கியம், பழைய கால … Read more

ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை: ஜெயமோகன்

இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி கட்டுரையின் லிங்கை மட்டும் கொடுக்காமல் கட்டுரையையே எடுத்துத் தந்திருக்கிறேன் – சாரு கீழே வருவது ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதியுள்ள கட்டுரை: இன்று ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கை எனக்கு வந்தது. அதில் சுந்தர ராமசாமியைப் பற்றி பிள்ளைகெடுத்தாள் விளை கதை சார்பாக அவர் கூறியவற்றை நான் மேற்கோள்காட்டியிருப்பது அவதூறு என்றும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் … Read more

இன்று இரவு ஒன்பது மணிக்கு ஸூமில் சந்திக்கிறேன்… (ஷார்லட் தமிழ்ச் சங்கம்)

ஸூம் மூலமாக வடக்கு கேரலினா மாநிலத்தில் உள்ள ஷார்லட் நகரத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணக்கும் வாசகர் சந்திப்பில் பேச இருக்கிறேன். அறிமுக உரை ஐந்து நிமிடம் இருக்கும். அடுத்து என்னுடைய உரை ஒரு மணி நேரம். கொண்டதும் கொடுத்ததும் என்பது தலைப்பு. அதைத் தொடர்ந்து அரை மணி நேரம் கலந்துரையாடல். இந்திய நேரப்படி இன்று ஞாயிற்றுக் கிழமை இரவு ஒன்பது மணி. 8.11.2020. அமெரிக்க நேரம் 10.30 AM EST. 300 பேர் வரை கலந்து கொள்ளலாம் … Read more

Pithy thoughts – 5

நான் இங்கே வந்ததிலிருந்து அவனைப் பார்க்கிறேன் ஒரு நாளும் தவறியதில்லை நெடுஞ்சாலையின் எதிர்ப்பக்கத்தில் படுத்திருக்கிறான் இடம் மாறியதேயில்லை அதே இடம் எப்போது இங்கே வந்தேனென்று ஞாபகமில்லை ஆனால் நீண்ட காலமாயிற்று என்பது மட்டும் நிச்சயம் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் காலையில் வந்தால் படுத்திருக்கிறான் மாலையில் வந்தால் படுத்திருக்கிறான் இரவில் வந்தாலும் படுத்திருக்கும் உருவம் தெரிகிறது பிரேதமென்றால் அழுகியிருக்காதா துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தியிருக்க மாட்டார்களா ஒருவேளை சயனத்திருக்கும் சிலையோ யாரும் வணங்குவதாகவும் தெரியவில்லை ஒருநாள் கூச்சத்தை விட்டு அருகில் … Read more