என் கடன் பணி செய்து கிடப்பதே…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு முடிந்து எக்ஸைலில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரு ஆண்டு சுமையை இறக்கி வைத்து விட்டது போல் ஆசுவாசமாக இருக்கிறது.  இன்று வரை நான்கு புத்தகங்களை ஸீரோ டிகிரி பதிப்பகத்திடம் கொடுத்திருக்கிறேன்.  மயானக் கொள்ளை – நாடகம் மாயமோகினி – கவிதைத் தொகுதி லத்தீன் அமெரிக்க சினிமா முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மொழிபெயர்ப்பு நாவல்) இது எல்லாம் புத்தக விழாவிலேயே வந்து விடுமா என்று சொல்ல முடியாது.  வந்தால் நல்லது.  எல்லா எழுத்தாளர்களுமே புத்தக விழாவில் தம் … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மீண்டும்)

அநேகமாக இனிமேல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி எழுத மாட்டேன்.  புத்தகம் வெளிவந்த பிறகுதான்.  ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள்.  இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை.  ஓரளவுக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கும் நான் தான் இப்படிச் சொல்கிறேன்.  பின்வரும் பகுதி நாவலின் கடைசி அத்தியாயத்தில் வருகிறது.  அதைப் படித்த பிறகு இது பூனைகளைப் பற்றிய நாவலோ என நினைத்து விடாதீர்கள்.  நாவலின் இந்தப் பக்கத்தில் மட்டுமே பூனைகள் – அதுவும் … Read more

பிறழ்வெழுத்து: சாபமும் விமோசனமும்

தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் படித்திருப்பீர்கள்.  அப்புவின் அம்மா அலங்காரம்தான் கதையின் பிரதான பாத்திரம்.  அவளுடைய கணவன் தண்டபாணி ஒரு வேதவிற்பன்னர்.  அலங்காரத்துக்கு சிவசு என்ற பணக்கார நிலக்கிழாருடன் தொடர்பு.  ரகசியத் தொடர்பெல்லாம் இல்லை.  அலங்காரத்தின் வீட்டுக்கே வெளிப்படையாக வந்து போய்க் கொண்டிருப்பவர்தான்.  ஒருநாள் சிவசு அலங்காரத்தின் வீட்டுக்கு வந்திருக்கும்போது தண்டபாணி மேல்தளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்.  சிவசு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து அலங்காரத்திடம் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது தண்டபாணிக்குக் கேட்கிறது.  தண்டபாணி குளித்து முடித்து விட்டார்.  வெளியே … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

முகமூடிகளின் பள்ளத்தாக்கு – இறுதிக் கட்ட வேலைகளை முடித்து விட்டேன்.  இரவு பகலாக அமர்ந்து இறுதிக் கட்ட பிழை திருத்தம், எடிட்டிங் எல்லாவற்றையும் இப்போதுதான் முடித்தேன்.  இந்த அளவு உழைப்பை நான் வேறு எந்தப் பிரதிக்கும் இதுவரை கொடுத்ததில்லை.  பன்னிரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் தட்டச்சு செய்திருக்கிறேன்.  ஆனால் பிழை திருத்தம் என்பது வேறு.  மௌஸைப் பிடித்துக் கொண்டே வேலை செய்ய வேண்டும்.  பன்னிரண்டு மணி நேரம் வலது கையை ஒரே இடத்தில் வைத்து மௌஸை … Read more

சில கேள்விகள், சில பதில்கள்

நாவல் நேஷன் என்ற அமைப்பு நடத்திய இலக்கிய விழாவின் Zoom சந்திப்பில் கலந்து கொண்டு முக்கால் மணி நேரம் அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். கேள்விகள் சுவாரசியமாக இருந்தன. யூட்யூப் இணைப்பு கீழே உள்ளது. கேட்டுப் பயன் பெறுங்கள். https://www.youtube.com/channel/UCrrkmPbv_u-O8uMNK9AAltg

தமிழின் எதிர்காலம்

நான் ஒற்று ஒழுங்காகப் போடாததற்கு அவ்வப்போது சாரு சுளுக்கெடுப்பார். சரி குழந்தைகளிடம் தமிழ் எந்தளவுக்கு புழங்குகிறது என்று பார்க்க, மதிய உணவு வேளையில் , செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொல்லி என்னா மீனிங் என்றேன் . ஆழி : காது கேக்காம அடைச்சிகிட்டா , வயிறு பசிக்கும். அப்ப வயித்துக்கு சாப்பாடு குடுக்கணும். இமயா : காதுக்கு உணவில்லாத போது , காது தன் சத்தை கொஞ்சம் வயித்துக்கும் அனுப்பும். ஆனாலும் ஆழி … Read more