பொருள்வெளிப் பயணம் – 3

www.bittalk.in மேற்கண்ட இணையப் பத்திரிகையில் நான் எழுதி வரும் பொருள்வெளிப் பயணம் தொடரின் மூன்றாவது கட்டுரை வந்துள்ளது. மற்ற இரண்டையும் கூட வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதேபோல் bynge.in செயலியை மொபைல் போனில் டவுன்லோட் செய்து அதில் வெளிவந்த அ-காலம் தொடரின் 27 அத்தியாயங்களையும் படித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். அதே bynge.in இல் வரும் 29 முதல் என்னுடைய புதிய நாவலான நான்தான் ஔரங்கசீப்… -இன் அத்தியாயங்கள் வெளிவர உள்ளன.

ஓப்பன் பண்ணா… பற்றி அராத்து

அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியில் நம்பிள் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. முதல் 5 இடங்களுக்குள் வருவது முதல் மற்றும் பெரும் சவால். ஏனென்றால் அமேசான் அல்காரிதம் நமக்குத் தெரியாது. இப்போது கூட பாருங்கள் ஒரு நாவல் 15 ரிவ்யூக்கள் மட்டுமே பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்திருக்கிறது. வழக்கமான பழக்கமான என் வாசகர்களைத் தாண்டி பொது வாசகர்களையும் ஈர்க்கும்படி இருக்க வேண்டும் என்பது சவால். ஆனால் நான் அப்படி ஏதும் மெனக்கெடவில்லை. … Read more

கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்

https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=13819037031 கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் 5 லட்சம் ரூபாய் முதல் பரிசு பெற்ற நாவல் ஓப்பன் பண்ணா. எழுதியவர் அராத்து. ஒரு மனிதனின் உளவியல் சிக்கலை இந்த அளவு நுணுக்கமாக அணுகிய ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் நான் கண்டதில்லை. அது மட்டும் அல்லாமல் புகழின் வெளிச்சத்துக்கு உள்ளே ஒரு மனிதன் எந்த அளவு அந்தகாரத்தில் வாழ்கிறான் என்பதற்கான ஒரு நேரடி ஆவணம் ஓப்பன் பண்ணா. தமிழில் எனக்கு இப்படி ஒரு நாவல் … Read more