கிண்டில் டிவைஸ் (சிறுகதை)

பொதுவாக மாணாக்கர்தான் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவார்.  ஆனால் சீனி சொல்லும் கதைகளைப் பார்த்தால் நானே அவரது வாழ்க்கையை எழுதி விடுவேன் போலிருக்கிறது.  அப்படிப்பட்ட நம்ப முடியாத கதைகள்.  இதையெல்லாம் நீங்கள் நாவலாக எழுதலாமே என்பேன்.  “என் வாழ்க்கையைப் பற்றி நான் எழுதக் கூடாது என்று தீர்மானமான முடிவு எடுத்திருக்கிறேன், அதனால் நீங்கள் வேண்டுமானால் தாராளமாக எழுதிக் கொள்ளலாம்” என்று சொன்னார்.  பலமுறை சொல்லியிருக்கிறார்.  சீனியின் கதையை விட அவர் தந்தையின் கதை இன்னும் பல மடங்கு … Read more

சார்பட்டா பரம்பரை

நேற்று சார்பட்டா பரம்பரை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விரிவாக எழுத நேரமில்லை. இன்னொரு காரணம், கருந்தேள் ராஜேஷ் போன்ற நண்பர்கள் எழுதுவதே என் அபிப்பிராயத்தை ஒத்திருப்பதால் எதற்கு நேர விரயம் என்று நினைக்கிறேன். காலா, கபாலி என்ற இரண்டு பாவங்களை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் கழுவி விட்டார் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார். எனக்குமே அப்படித்தான் தோன்றியது. மெட்ராஸ் என்ற படம் எவ்வளவு சுவாரசியமாக இருந்ததோ அதே சுவாரசியம் சார்பட்டாவிலும். … Read more