தொலைந்து போன புத்தகம்…

அப்போது இலக்கியம் ஒரு கண், குடி இன்னொரு கண்.  அப்படி ஒரு குடி.  ஆனால் குடியைக் குடிக்காகக் குடிப்பதில்லை.  அதுவும் ஒரு தோது.  தி.ஜானகிராமனும் கு.ப.ரா.வும் வெற்றிலை பாக்கும் புகையிலுமாக இரவு பூராவும் இலக்கியம் பேசுவார்களாம்.  ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு அய்ட்டம்.  அப்போது வெற்றிலை பாக்கு புகையிலை.  இப்போது குடி.  பாரிஸிலிருந்து வாசன் வந்திருந்தான்.  நெருங்கிய நண்பன்.  சென்னை வந்தால் சின்மயா நகரில் ராமானுஜம் வீட்டில்தான் தங்குவான்.  இங்கே ராமானுஜத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பெயருக்கேற்ற புத்திசாலி.  … Read more

பூஜா ஹெக்டே

வணக்கம் சாரு.. ரொம்ப நாளைக்கு அப்புறம் இடுப்புக்குத் திரும்பி வந்துருக்கீங்க. வாழ்த்துக்கள். மட்டற்ற மகிழ்ச்சி.. கொஞ்சம் சைடு விட்டீர்கள் என்றால் அந்த குன்றில் நானும் ஏறி உங்கள் குரலுக்கு வலு சேர்ப்பேன். ஜெய் பூஜா ஹெக்டே!! நாள் மஜாவா ஆரம்பிச்சிருக்கு. உங்க ரசிகனா இருந்தா மட்டும் தான் கீழ வர பாட்டெல்லாம் யூடூப்பில் பரிந்துரையா வரும். https://en.wikipedia.org/wiki/WAP_(song) எமினெம் எல்லாம் தூர ஓடணும். Cardi B ரகள பண்ணிருக்கு. Exile ஒரு நாலு பக்கம் படிச்சா மாறி … Read more

பூஜா ஹெக்டேயும் கலாச்சார மேட்டிமை வாதமும் (கட்டுரை வடிவிலான சிறுகதை)

Madras Elite Club என்று ஒரு க்ளப் உள்ளது.  பணக்காரராகவோ அதிகாரம் உள்ளவராகவோ சினிமா துறையைச் சேர்ந்தவராகவோ இருப்பதால் மட்டும் இதில் உறுப்பினராகி விடலாம் என்று நினைத்தால் முடியாது.  ஒரு வருட காலம் எலீட் க்ளப் பக்கம் போய்க் கொண்டிருந்தால் உங்கள் நடையுடை பாவனைகளை அவதானித்து, பிறகு உறுப்பினருக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பார்கள்.  முக்கியமான விஷயம், மத அடையாளங்களை அணிந்திருக்கக் கூடாது.  சீக்கியர்களின் தலைப்பாகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.  அது கூட ரொம்பப் பெரிதாக இருக்கக் கூடாது.  … Read more