3. கொல்லும் இச்சை பற்றிய பதிலின் தொடர்ச்சி…

ஜனன மரணம் பற்றிய பதிலில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டு விட்டது.  லா பெத்தி மோர்த் (La petite morte) என்று சொல்வார் ஜார்ஜ் பத்தாய்.  சிறிய மரணம்.  கலவியின் உச்ச இன்பம் மரணத்துக்கு ஒப்பானது என்கிறார். கலவியில் ஈடுபடுவோர் தம்மை முழுதாக மறக்கிறார்கள் அல்லவா, அதனால்தான் அது சிறிய மரணம்.  ஆக, இதையும் சேர்த்துக் கொண்டால், கொல்லும் இச்சை என்பதை நாம் கலையாகவும், சிருஷ்டியாகவும் உருமாற்றம் செய்து விடலாம்.    4. நாகூரில், போக்குவரத்து குறைந்த, … Read more

ஔரங்ஸேப் நூறு

நான்தான் ஔரங்ஸேப்… நாவல் நூறாவது அத்தியாயத்தைத் தாண்ட இருக்கிறது. அதற்காக மார்ச் 19 அன்று புதுச்சேரி ஆரோவில்லில் ஒரு விழா நடக்க உள்ளது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். விழாவில் மதுவுக்கு அனுமதி இல்லை. மற்றபடி மதியம் மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று திட்டம். அதற்கு நிதி உதவி இருந்தால் நல்லது. முடிந்தவர்கள் உதவலாம். பணம் அனுப்பும்போது மார்ச் 19 விழா நிதி என்றோ ஔரங்ஸேப் விழா என்றோ குறிப்பிட்டு அனுப்பினால் வசதியாக இருக்கும். … Read more

முதல் நூறு – 3

கொல்லும் இச்சை பற்றி உங்கள் கருத்து என்ன சாரு? பெரும்பாலான மனிதர்கள் வாழ்வின் எதாவதொரு சந்தர்ப்பத்தில் கொல்லும் இச்சையை அடைகிறார்கள் என்பது உண்மையா? நிறையப்பேர் சிறு உயிர்களை அல்லது தாவரங்களை நிர்மூலமாக்குவதன் மூலம் அந்த இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது. எழுத்தாளன் தான் வாழாத பல வாழ்க்கைகளைத் தன் எழுத்தினூடாக வாழ்ந்து பார்க்க முயலுகிறான் என்பது உண்மையானால் இந்தக் கொல்லும் இச்சையையும் அவன் தன் எழுத்தினூடாகக் கடந்து விட முடியுமா? ஜனனி கிருஷ்ணா   பதில்:  … Read more

முதல் நூறு – 2

2.  தாங்கள் என்றாவது சிறார்களுக்காக ஒரு நாவல் எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா? அவ்வாறு எழுதினால் அந்த நாவல் எதைப் பற்றியதாக இருக்கும்? பிரியா, திருநெல்வேலி. பதில்: ஒருமுறை சிறார்களுக்காக கல்கியில் குட்டிக் கதைகள் எழுதலாம் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது.  கல்கி ஆசிரியரின் யோசனைக்கு ஏற்ப ஒன்றிரண்டு எழுதியும் அனுப்பினேன்.  ஆனால் “கடினமாக இருக்கிறது, புரியாது” என்றார்கள்.  அதோடு விட்டு விட்டேன். சிறார்களுக்குச் சொல்ல என்னிடம் ஏராளமான விஷயங்கள் உண்டு.   அறிவு என்ற பெயரில் மேற்கத்திய விஷயங்கள் … Read more

சொற்கடிகை – 17

ஞாயிற்றுக்கிழமை அன்று புத்தக விழாவில் ஒரு நண்பர் குடிக்க அழைத்தார்.  இதுவே நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தால் யோசிக்காமல் சென்றிருப்பேன்.  குடிக்கவும் பிடிக்கும். நண்பரும் பிடித்தமானவர்.  அடிக்கடி சந்திக்கக் கூடியவரும் இல்லை.  இப்போது என் வாழ்க்கையே மாறி விட்டது என்று அவரிடம் சொன்னேன்.  அவருக்குப் புரியும்படி சொல்ல அங்கே இயலவில்லை.  நான் குடிப்பது இல்லை.  அது முதல் விஷயம்.  அப்படியே குடிப்பதாக இருந்தால் அந்த வைன் இங்கே கிடைக்காது.  அப்படியே கிடைத்தாலும் நான் செல்ல முடியாது.  ஏனென்றால் ஞாயிறு மதியமே ஔரங்ஸேப் அத்தியாயம் போயிருக்க வேண்டும்.  நானோ தினமும் புத்தக விழாவுக்கு வந்து … Read more

சொற்கடிகை – 16

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் நாவலைப் படித்திருக்கிறீர்களா?  அதில் பாலா என்று ஒரு ஆள் வருவார்.  மார்கிஸிஸ்ட் புத்திஜீவி.  அந்த ஆள் நாவலின் கதைசொல்லியான சூர்யாவிடம் ஒரு பண்ணையார் போல் நடந்து கொள்வார்.  அம்மாதிரி என் நண்பர் ஒருவரிடம் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர் நடந்து கொண்டார்.  எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்.  பண்ணையார்த்தனமெல்லாம் காட்டினால் விலகி விடுவேன்.  விலக்கி விடுவேன். நிலப்பிரபுத்துவப் பண்ணையார்த்தனத்துக்கெல்லாம் என்னிடம் மன்னிப்பே கிடையாது.  என்ன ——க்கு இவர்கள் ஃபூக்கோ —————-யையெல்லாம் … Read more