சொல் தீண்டிப் பழகு – நூல் வடிவில்
குமுதத்தில் நான் தொடராக எழுதி வந்த சொல் தீண்டிப் பழகு நூலாக வந்து விட்டது. https://tinyurl.com/soltheendipazhagu
குமுதத்தில் நான் தொடராக எழுதி வந்த சொல் தீண்டிப் பழகு நூலாக வந்து விட்டது. https://tinyurl.com/soltheendipazhagu
11 ஔரங்ஸேப் இன்னொரு அத்தியாயம் எழுத வேண்டும். அதனால் அந்த அதிரடி விஷயத்தை நாளை எழுதுகிறேன். பில்டப் கொடுக்கவில்லை. உண்மையிலேயே அதிரடிதான். நீண்ட கதை என்பதால் நேரம் வேண்டும். அதற்கு முன்னால் வேறொரு விஷயம். அருண்மொழி நங்கையின் புத்தக வெளியீட்டு விழா முடிந்து வெளியே வந்து ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அஜிதனும் வந்தார். பேசினேன். ஜெயமோகன் கட்டம் போட்ட சட்டை போடாமல் வந்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அஜிதன் படு ஸ்மார்ட்டாக இருந்தார். மூன்று வயதில் பார்த்தது. … Read more
(ஆணின் ஜனன ஸ்தானத்தைக் குறிக்கும் ஒரு மூன்று எழுத்து கெட்ட வார்த்தை இக்கட்டுரையில் மூன்று நான்கு முறை வருகிறது. அந்த வார்த்தையை அலர்ஜியாகக் கொண்ட கொழுந்துகள் இதைப் படிக்க வேண்டாம்…) மூன்று நான்கு தினங்களாக இந்தப் பக்கம் வராத காரணம்தான் இன்றைய கதை. ஒருநாள் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை நூல். ஒருநாள் ஔரங்ஸேப் உர்தூ மொழிபெயர்ப்புக்காக சில சந்திப்புகள். நேற்று ஒரு நபரிடம் மாட்டிக் கொண்டேன். முழு நாளும் காலி. நாலைந்து நாட்களுக்கு முன்பு தெரியாத … Read more
ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாலை நான்கு மணிக்கு ஸீரோ டிகிரி அரங்கில் அமர்ந்திருப்பேன். வந்து ஒரே ஆளாக நின்று கொண்டு பல மணி நேரம் மொக்கை போடும் கொடுஞ்செயலை மட்டும் செய்யாதீர்கள். இப்படி எழுதினால் என்ன ஆகிறது என்றால் தூரத்தில் நின்றபடியே என்னைக் கை காண்பித்து ஏதோ முணகியவாறு சென்று விடுகிறார்கள். அவர்கள் இளைஞர்கள். இந்தத் தளத்தை வாசிப்பவர்கள். ஆனால் மொக்கை போடும் ஜென்மங்கள் அத்தனையும் அறுபதுக்கு மேற்பட்டதுகள், இந்தத் தளத்தை வாசிக்காததுகள். என்ன … Read more
நேற்று சீனி ஒரு விஷயம் சொன்னார். ஸ்விக்கியில் இன்ஸ்டாமார்ட் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் போய் மேரினேட்டட் என்ற பகுதிக்குள் போய் மாமிசம் என்ற உட்பிரிவுக்குள் சென்றால் நீங்கள் விரும்பிய அசைவ உணவு மேரினேட் பண்ணியதையே கொண்டு வந்து தருகிறார்கள். நேற்று நான் அப்படி ஒரு ’தாய்’ ஸ்டைலில் செய்த ப்ரான் வரவழைத்து அவர்கள் சொன்னபடியே வாணலியில் வைத்து கொதிக்க வைத்து சாப்பிட்டேன். அற்புதமாக இருந்தது. நான் தாய் உணவுக்கு அடிமை. ஆஹா, கை மேல் … Read more
ஔரங்ஸேப் – இதுதான் சரியான உச்சரிப்பு. இது பற்றி இன்று ஹரியிடமிருந்து வந்த கடிதம். Dear Charu, 35ஆவது அத்தியாயத்தைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறேன். பிரமாதம்! இந்த பிரமாதத்தை போன emailலிலே சொல்ல நினைத்தேன். ஆனால் உங்கள் reaction எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இளையராஜாவிடம் போய் யாராவது உங்கள் இசை ப்ரமாதம் என்றால் அவர் என்ன சொல்லுவார்? அவர் இசை ப்ரமாதம் என்று சொல்ல வேண்டுமா? ஆனால் இப்போது எனக்கு சொல்லியே ஆக வேண்டும்.சரித்திரம் … Read more