சொற்கடிகை – 6

பத்து வயதிலிருந்தே அந்த வியாதி உண்டு.  மறதி.  இங்கே அவசியம் வயதைச் சொல்லி விட வேண்டும்.  இல்லாவிட்டால், வயசாய்டுச்சு இல்லப்பா என்று சொல்லி நம்மைக் காலி பண்ணி விடுவார்கள்.  வயசு பற்றி நாளை எழுதுகிறேன்.  அந்த அச்சுறுத்தலால்தான் முதல் வாக்கியத்திலேயே சொல்லி விட்டேன்.  பத்து வயதிலிருந்தே எனக்கு மறதி வியாதி உண்டு.  சும்மா எல்லோருக்கும் வரும் மறதி இல்லை.  வினோதமான மறதி.  ஒருத்தரின் பெயர் ரகு என்று வைத்துக் கொள்வோம்.  அவர் பெயர் ரகு என்பது மறந்து … Read more

George Guidallஇன் வாசிப்பில் அடியேனின் சிறுகதை

இத்தாலியில் உள்ள Fondazione Prada என்ற அமைப்பின் மூலம் நடக்க இருக்கும் ஓவிய, சிற்பக் காட்சியில் என்னுடைய Tandav at Tadaka என்ற சிறுகதை Goerge Guidall மூலம் வாசிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காகவே எழுதிய சிறுகதை அது. ஜார்ஜ் கைடல் உலகப் புகழ் பெற்ற ஆடியோ புத்தக வாசிப்பாளர். அமெரிக்க உச்சரிப்பாக இருந்தாலும் இவருடைய வாசிப்பு நம் எல்லோருக்குமே புரியக் கூடியதாக இருப்பது சிறப்பு. பல உலகப் புகழ் பெற்ற கிளாசிக்குகளை இவர் வாசித்த ஆடியோ … Read more

அறம்

பொதுவாக நான் பதிப்புச் சூழல் பற்றி எது எழுதினாலும் ஸீரோ டிகிரி நண்பர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்.  எனக்கும் ஸீரோ டிகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  காயத்ரி, ராம்ஜி இருவரும் என் நெருங்கிய நண்பர்கள்.  அவ்வளவுதான்.  சென்னையில் பாரதிராஜா மருத்துவமனை என்று உள்ளது.  அதற்கும் பாரதிராஜாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அதன் முதலாளி பாராதிராஜாவின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்.  அதைப் போலத்தான் இதுவும்.  எனவே இப்போது நான் எழுதப் போகும் இந்த விஷயத்துக்கும் ஸீரோ டிகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அவர்களுக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்காதீர்கள்.   நேற்று என் பதிப்பக … Read more

சொற்கடிகை – 5

டியர் சாரு, யூ டியூப் கதை வாசிப்பு குறித்து வித்யாவுடன் சாட் செய்கையில் நீங்கள் என்னைப் பாராட்டியது பற்றிப் பகிர்ந்திருந்தேன். அதற்கு அவர் என்னிடம் கூறியதை இங்கு பகிர விரும்புகிறேன். “Excellent. Treasure! He is beyond my words of description. Not everyone will do what he does!” அப்போது எனக்குப் பாதிதான் புரிந்தது. அத். 84இல் வெங்கோஜி பகுதி வரும்போது முழுவதும் புரிந்தது. அற்புதம் சாரு! அத். 85இல் அவரவருக்கான நியாயங்கள், … Read more

நான்தான் ஔரங்கசீப்…

நான்தான் ஔரங்கசீப்… எப்போது முடியும் என்று பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கா சலிப்புத் தட்டுகிறது என்று கேட்பேன். இல்லை, புத்தகமாகப் படிக்கும் ஆர்வத்தில் கேட்கிறேன் என்று பதில் வரும். எப்படியோ, எல்லோருக்கும் என் பதில் இதுதான்: எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது. ப்ளூப்ரிண்ட் மாதிரி போட்டு எழுதியெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. அது பாட்டுக்குப் போகும், முடியும். எனக்கு எதுவும் தெரியாது. நடப்பு அத்தியாயங்கள் மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருப்பது மட்டும் தெரியும். ஆக, … Read more

கமலை வம்புக்கிழுக்கும் ஒளரங்கசீப்: Episode 85 : நிர்மல் ம்ருன்ஸோ

இன்று வெளியான 85ஆவது அத்தியாயம் பல சுவாரஸ்யமான காட்சிகளும் , மனித வாழ்வு அபத்தத்தை நுணுக்கமாகச் சொல்கிறது. இந்த நாவலின் மூன்றாம் பகுதியில் கொக்கரக்கோ என்ற பாத்திரத்தை கொண்டு வந்துள்ளார். இடைவிடாத ஆவிகளின் உரையாடலுக்கு மத்தியில் இந்த கொக்கரக்கோ இருப்பது ஒரு வகையில் விறுவிறுப்பென்றாலும் நாவலின் போக்கை கலைத்து போடுகிறவனை இப்படி நாவலின் இறுதிப் பகுதியில் கொண்டு வந்திருப்பது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. புண்ணியரான தியாகராஜரைக் குறித்து ஒளரங்கசீப்பை சொல்ல வைப்பதெல்லாம் ரகளையான கற்பனை. இதெல்லாம் … Read more