எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர்…

அமிர்தம் சூர்யா என் மீது அன்பு மிகக் கொண்டவர்.  என் இளவல்.  அதை விட முக்கியமாக, என்னைப் போலவே அல்லது அதை விட அதிகமாகவே வெகுளி.  சமீபத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார். ”சாரு நிவேதிதாவின் எழுத்தாற்றலை புகழ்ந்து இன்னும் எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர் என்று ஆதங்கம்.காட்டினார்…” சூர்யா ஒரு நண்பரைச் சந்திக்கிறார்.  இலக்கியவாதிகளின் சந்திப்பில் எத்தனையோ பேசுவோம்.  அதையெல்லாம் நாம் நம்முடைய சொந்தக் கருத்தாக வெளியே முன்வைப்போம் என்று சொல்வதற்கு இல்லை.  பல விஷயங்கள், பல அபிப்பிராயங்கள் … Read more

பெயர்க் குழப்பம்: குழந்தைகள்: நூலகங்கள்

சீனி என்னை அழைத்து ஔரங்ஸேப் விழா பற்றி எழுதியதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய முடியுமா என்று சிவபாலன் கேட்கிறார் என்றார். சிவபாலனா, ”திருப்பூர்க்காரர்தானே? ஒரு லட்சம் கொடுத்தாரே?” என்றேன். அதில்தான் பிரச்சினையே… என்ன பிரச்சினை? அவர் திருப்பூர் இல்லை, பொள்ளாச்சி. ஓ, மாற்றி விடுகிறேன். அது மட்டுமல்ல. பின்னே? அவரைப் பற்றி நீங்கள் எழுதியதைத் தன் நண்பர்களிடமும் குடும்பத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் பெயரும் தப்பாக உள்ளது, ஊரும் தப்பாக உள்ளது. … Read more

சிறார்களுக்கான நூலகம்

என் வாசகியும் தோழியுமான ப்ரியாவும் அவர் கணவர் செல்வராஜும் சேர்ந்து வளவன்கோட்டை (திருநெல்வேலி) கிராமத்தில் 20.3.2022 அன்று குழந்தைகளுக்கான (5 வயதிலிருந்து 15 வயது வரை) ஒரு நூலகத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போதைக்கு 300 புத்தகங்கள் உள்ளன. மாதந்தோறும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறையும் நடக்க உள்ளது. இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். திராவிடக் கட்சிகள் இலக்கியத்துக்காக என்ன செய்ததோ செய்யவில்லையோ, நான் உருவானதே நூலகங்களால்தான். ஆரம்பத்தில் படிப்பகங்களாக இருந்தன. எம்ஜியார் படிப்பகம்தான் முதல். தரையில் பாய் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… முடிந்தது

109ஆவது அத்தியாயமே இறுதி அத்தியாயம். கொஞ்ச நேரம் முன்புதான் எழுதி முடித்தேன். இப்படியெல்லாம் ஒரு நாவலை இதுவரை என் வாழ்வில் முடித்ததில்லை. காரணம், முடிக்கும்போது என் ஆன்மா விம்மியது, கேவியது, அழுதது. கண் கலங்கி கண்ணீர் வழிந்தது. விரைவில் நாவலை செப்பனிட்டு பதிப்பகத்துக்கு அனுப்ப வேண்டும். செப்பனிடுதல் என்றால் இன்னும் பத்து இருபது அத்தியாயங்கள் சேரும். எழுதி வைத்திருக்கிறேன். அதற்கு ஒரு வாரம் எடுக்கலாம். எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு மாதங்களில் நாவல் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும். பிஞ்ஜில் … Read more

நிறுத்த வேண்டாம்…

வணக்கம் சாரு,உங்களின் வலைத்தளத்தில், ஒளரங்ஸேப் தொடரை நிறுத்திவிடலாமா என்று யோசித்ததாகவும்  மற்றும் சிலர் அதை திராபை என்று சொன்னார்கள் என்றும் எழுதியிருந்தீர்கள். மிகவும் வருத்தமாக இருந்தது. முன்பு ஒரு முறை உங்களிடம் , இந்த தொடர் புத்தகமாக வெளிவந்ததும் படிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், 73 அத்தியாயங்கள் படித்த்து முடித்துவிட்டேன். தொடரந்து படிக்க நேரம் இல்லை இப்பொழுது.பிறகு நிச்சயமாக வாசிப்பேன்.புத்தகத்தையும் வாங்க படிப்பேன். எனக்கு வரலாறு படிப்பதில் ஆர்வம் அதிகம். இந்த தொடருக்காக நீங்கள் போடும் உழைப்பு , … Read more

நான்தான் ஔரங்ஸேப் கொண்டாட்டம். ஒரு பார்வை.

இலக்கிய கூட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை நம் தமிழ் சூழலில் இருக்கிறது. ஒரு ஹால் இல்லையேல் ஒரு பொதுவான இடம் புக் செய்யப்படும். அங்கு புத்தகம் வாசித்த ,வாசிக்காத மனிதர்கள் வருவார்கள். ஒருவர் அங்கு மைக் பிடித்து பேசத் தொடங்குவார். அவர் பேச நாம் கேட்க நாம் கேட்க அவர் பேச என விழா இனிதே நிறைவேறும். உள்ளே செல்லும் போதே எல்லோருக்கும் மிக்ஸர் வழங்கப்படும் என நினைக்கிறேன். வாயை மட்டும் … Read more