எனது வாழ்வைக் கவிதையாய் மாற்றினாய்!

மீள் பிரசுரம் ஜூலை 31, 2004 இளம் பிராயத்தில் நான் வாசித்த ஒரு புத்தகமே என் வாழ்வின் போக்கை முழு முற்றாகத் திசை திருப்புவதற்கும் காரணமாக அமைந்தது. அந்தப் புத்தகம், சேகுவாரா எழுதிய பொலிவிய நாட்குறிப்புகள். அதன் பிறகு, லத்தீன் அமெரிக்கா சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதன் மீது தீராக் காதல்கொண்டு அதிலேயே என்னை ஆழ்த்திக்கொள்ள ஆரம்பித்தேன். லத்தீன் அமெரிக்க சினிமா, அரசியல், விடுதலை இறையியல், கால்பந்து, ஸல்ஸா, ஸான்டினிஸ்டா, மெரெங்கே என்று அந்தப் பட்டியல் வெகு … Read more

ஸ்பரிஸம்

நீ யார் உன் பேரென்ன ஊரென்ன தேசமென்ன நீ படித்திருக்கிறாயா எத்தனை படித்தாய் உனக்கு மணமாகி விட்டதா எத்தனை குழந்தைகள் பாய் ஃரெண்ட் உண்டா உனக்கு எது எதெல்லாம் பிடிக்காது உனக்கு எது எதெல்லாம் பிடிக்கும் இது எதுவுமே எனக்குத் தெரியாது அதேபோல் உனக்கும் என்னைத் தெரியாது நீயும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறோம் அதற்குப் பிறகு காலவெளியில் நாம் சந்திக்கும் வாய்ப்பே இல்லை ஆனாலும் பெண்ணே உன் ஸ்பரிஸம் பேரின்பத்தின் உச்சம் … Read more

யோகப் பயிற்சி முகாம்

ஜெயமோகன் தளத்தில் இருந்து: நண்பர்களுக்கு வணக்கம். வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் ஒரு யோகப்பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கப்படுகிறது. கட்டணம் உண்டு பங்கெடுக்க விரும்புபவர்கள் jeyamohan.writerpoet@gmail.com  என்னும் முகவரிக்கு எழுதலாம். பெயர், தொலைபேசி எண், ஊர், வயது, நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா? ஆகிய தகவல்களுடன் எழுதலாம் * யோகப்பயிற்சிகள் சார்ந்த எண்ணற்ற பள்ளிகள் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும், வெகு சில மரபார்ந்த கல்விநிலைகள் மட்டுமே, இந்த துறையில் நீண்ட ஆய்வுகளை … Read more

போன ஜென்மத்தில் சேவலாக இருந்தவனைப் பற்றிய ஒரு கதை (அல்லது) சாசனம் : ஒரு நெடுங்கதை

அப்போது எனக்கும் என் பத்தினிக்கும் கல்யாணம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இன்றைய கணக்கில் சரியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கலாப்ரியா நடத்திய குற்றாலம் கருத்தரங்கு.  விஷயம் தெரியாதவனாகவோ அல்லது அனுபவமின்மையினாலோ என் பத்தினியையும் அழைத்துக் கொண்டு குற்றாலம் போனேன்.  பகல் பூராவும் பேச்சு, உரையாடல், விவாதம்.  இரவிலும் பேச்சு, உரையாடல், விவாதம். ஒரே வித்தியாசம், இரவில் மதுவும் சேர்ந்து கொண்டது.  பகல் முழுவதும் அருவியில் பொழுதைப் போக்கிக் கொண்ட பத்தினிக்கு இரவில் என்ன செய்வது என்று … Read more

சென்னை (மூன்றாவது அத்தியாயம்)

ஒரு நடிகை வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருக்கிறார், ஏன் உங்கள் மனைவி சென்னையை விட்டு வெளியூர் போக மறுக்கிறார்? மிக நீண்ட பதிலைக் கோரும் ஒரு கேள்வி.  முதல் விஷயம், அவளுக்கு சென்னை பற்றி என் அளவுக்கு எந்த வெறுப்பும் கிடையாது.  அதற்குக் காரணம், அவளுக்கு சென்னை தவிர வேறு எந்த ஊரும் தெரியாது.  மேலும், இங்கேதானே அவளுடைய பெற்றோர் கிற்றோர் எல்லாமே இருக்கிறார்கள்?  இதுதானே அவள் வாழ்ந்த வளர்ந்த ஊர்?  இதை விட்டுவிட்டு அவள் கோயம்பத்தூர் சென்றால், … Read more

சென்னை (மீண்டும்…)

தெறிக்க விட்டிருக்கிறார்கள் சென்னையின் காதலர்கள்.  குடித்து விட்டு வந்து தினந்தோறும் உதைக்கும் கணவனையும் பெண்டாட்டி “எம் புருஷன் தங்கம்ல” என்று சொல்லும் கதைதான்.  ஹைதராபாதில் சென்னை அளவுக்கு யாரும் ஏமாற்றுவது இல்லை.  ஒரு சிங்கிள் டீ அங்கே ஏழு ரூபாய்.  குடிப்பதற்கு தேவாம்ருதமாக இருக்கிறது.  இங்கே சென்னையில் கழுதை மூத்திரம் மாதிரி இருக்கும்.  பத்து ரூபாய்.  காஃபி பன்றி மூத்திரம் மாதிரி இருக்கும்.  முப்பது ரூபாய்.  வீடு வாடகைக்குப் பார்த்தால் பத்து மாத முன்பணம்.  வாடகை ஐம்பது … Read more