கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள்! (தகவல் தொடர்பு கட்டுரையின் தொடர்ச்சி)

அன்புள்ள நண்பருக்கு, உங்கள் வாட்ஸப் மெஸேஜ் கிடைக்கப் பெற்றேன்.  மன்னித்து விடும்படி எழுதியிருந்தீர்கள்.  மன்னிக்கும் அளவு பெரிய தவறு அல்ல உங்களுடையது.  நான் ஃபோன் செய்தேன்.  உங்களால் எடுக்க முடியாத நிலை.  பிறகு பதிலுக்கு ஃபோன் செய்ய மறந்து போனீர்கள்.  இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?  உண்மையில் மன்னிப்பு என்பதன் அர்த்தம் “இனிமேல் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வேன்” என்பதுதானே?  ஆனால் அதற்கான தேவையே இனிமேல் எழாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்.  நான் உங்களுக்கு ஃபோன் … Read more

the outsider (25)

பலவிதமாக ஆலோசித்தார்கள் கமாண்டோக்கள்.  அதில் ஒரு யோசனை: ஒரு ட்ரக்கை வாங்கி, அதில் ஆயுதங்களை வைத்து மேலே காய்கறிகளால் மூடி விடுவது.  ஒவ்வொரு வீடாகப் போய் காய் வேண்டுமா என்று கேட்பது.  இலக்கு வெளியே வரும்போது ட்ரக்கில் இருந்தபடியே தாக்குவது.  உடனே ஒரு சந்தேகம் வந்தது, சொமோஸாவின் பென்ஸ் குண்டு துளைக்காத காராக இருந்தால்? மேலும், ட்ரக் என்றால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.  எனவே ட்ரக் யோசனை உடனடியாகக் கைவிடப்பட்ட்து.  என்ன செய்ய வேண்டும் என்றால், யாருடைய … Read more

தகவல் தொடர்பு

முந்தாநாள் சீனி ஒரு கதை அனுப்பியிருந்தார்.  ஐந்தே நிமிடத்தில் படித்து விட்டு சூப்பர்ப் என்று வாட்ஸப் செய்திருந்தேன்.  இன்று சீனி ஃபோன் பண்ணி, கதை படிக்க நேரம் இருந்ததா என்று கேட்டார்.  அப்போதே பதில் அனுப்பி விட்டேனே என்றேன்.  என் பதில் அவருக்குப் போய்ச் சேரவில்லை போல.  இது போன்ற சிறிய விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் நம் வாசகர் வட்ட நண்பர்களுடன் தகவல் தொடர்பில் பிரச்சினையே வந்ததில்லை.  இதற்கு வெளியே தகவல் தொடர்பில் எனக்கு மன உளைச்சல் … Read more

ஈகோ

பொதுவாக மனிதர்களோடு சேர முடியவில்லை.  சேர்ந்து கூட்டாக வெளியூர் செல்ல முடியவில்லை.  அடுத்த மனிதனே பெரும் துன்பமாக இருக்கிறான்.  ஏன் இப்படி என்று பதினைந்து ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பதினைந்து ஆண்டுகள் என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது.  பதினைந்து ஆண்டுகளாகத்தான் சீனியை எனக்குத் தெரியும்.  சீனி என் வாழ்வில் நுழைந்த பிறகுதான் இந்தப் பிரச்சினை ஸ்தூலமாகத் தெரிய ஆரம்பித்தது.  அதாவது, பிரச்சினை சீனியின் மூலமாக அல்ல. சீனியும் நானும் அடுத்த மனிதரை எங்களோடு சேர்த்துக் கொள்ளும்போது பிரச்சினை … Read more

ஒரு சந்திப்பு

தினமும் 2000 இலிருந்து 3000 வார்த்தைகள் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு என் வாழ்நாளில் எப்போதும் எழுதியதில்லை.  மழை காரணமாக வீட்டை விட்டும் வெளியே செல்ல முடியவில்லை.  அதனால், ஒரு மாற்றத்துக்காக இந்த மாதம் 19, 20, 21 (சனி, ஞாயிறு, திங்கள்) மூன்று நாளும் ஏற்காட்டில் இருப்பேன்.  18 இரவே ஏற்காடு வந்து விடுவேன்.  ஏற்காடு என்றாலே கொலைப்பசி என்ற விஷயம் பயமுறுத்துகிறது.  இந்த முறை செல்வகுமார் என்னோடு வருவதால் – அவரிடம் காரும் இருக்கிறது என்பதால் … Read more

த அவ்ட்ஸைடர் – 24

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்வதென்று எல்லோரும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறோம்.  எந்தக் குற்றமும் செய்யாத ஒரு சாதாரண சராசரி மனிதனின் முகபாவம் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட முகபாவத்தோடு நாங்கள் எங்கள் வீட்டை நோக்கிச் சென்றோம்.  வீட்டின் உள்ளே சென்றவுடன் யாரிடமும் எதுவும் பேசவில்லை.  விளக்கையும் ஐந்து நிமிடத்தில் அணைத்து விட்டோம்.  ஆயுதங்கள் காரிலேயே இருந்தன.  அதைப் பற்றியும் கவலைப்படவில்லை.  இம்மாதிரி சமயங்களில் மற்றவர்களாக இருந்தால் உடனடியாக, ரகசியமாக ஆயுதங்களை எடுத்து வைத்துக் காபந்து பண்ணுவார்கள்.  போலீஸ் வேறு … Read more