கோவாவில் ஒரு வீடு

பெங்களூர் சென்றிருந்ததால் நம் தொடரைத் தொடர முடியவில்லை.  இப்படி ஒரு இடைவெளி வரும் என்று தெரிந்ததால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதைப் பதிவேற்றம் செய்யும்போது கட்டுரை கணினித் திரையிலிருந்து காணாமல் போய் விட்டது.  அதைத் திரும்பவும் நாளை உட்கார்ந்து எழுத வேண்டும்.  அதற்கு முன்னால் ஒரு விஷயம்.  நான் இனிமேல் மாதத்தில் ஐந்து நாள்கள் கோவாவில் இருப்பேன்.  பெங்களூருக்கு பதிலாக கோவா.  அதன் பொருட்டு கோவாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்.  … Read more

24. போர்னோவும் கலையும் (தொடர்ச்சி)

“எனது படங்களின் நோக்கம், பெண்களின் பாலியலைக் காண்பிப்பது அல்ல; அதை ஆய்வு செய்வதே.”                                                                                     – காத்ரீன் ப்ரேயா காத்ரீனின் இருபத்தைந்து ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் (2004இல் எழுதப்பட்ட கட்டுரை இது) அவரது ஆறாவது படம் ரொமான்ஸ்.  ரொமான்ஸை மிகச் சுருக்கமாக ‘ஒரு பெண் பாலியலை சுயவதையின் (masochistic) மூலமாக அணுகுவது’ என்று சொல்லலாம். இப்படத்தின் முன்னோடியாக Nagisa Oshimaவின்  In the Realm of Senses (1976) திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார் காத்ரீன்.  … Read more

23. போர்னோவும் கலையும்: காத்ரீன் ப்ரேயாவின் திரைப்படங்களை முன்வைத்து…

(ஒரு முன்குறிப்பு:  இந்தக் குறிப்பிட்ட கட்டுரை 2005இல் எழுதப்பட்டு, உயிர்மையில் வெளிவந்த்து.  பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு கட்டுரை தமிழில் வந்திருக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். பின்னர் இந்தக் கட்டுரை ”சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்” என்ற என் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.  இந்தக் கட்டுரையை நான் கேட்டவுடன் எடுத்துக்கொடுத்த ஸ்ரீராமுக்கு இப்போது இதை நான் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.  நாம் இப்போது விவாதித்து வரும் விஷயங்களுக்கு மிகவும் தேவையான கட்டுரை என்பதால் … Read more

22. என்னை உருவாக்கிய திரைப்படம் (1)

முழுக் கட்டுரையையும் இன்று முடிக்க முடியாது என்று தோன்றுவதால் பகுதி ஒன்று என்று கொடுத்திருக்கிறேன்.  இன்றும் வீடு தேடி அலைய வேண்டியிருக்கிறது.  பார்ப்போம்.  ***  உலக இலக்கியத்தில் ட்ரான்ஸ்கிரஸிவாக எழுதியவர்கள் யாரும் தனியாக, ஒற்றை ஆளாக இல்லை.  உதாரணமாக, கேத்தி ஆக்கர் என்ற பெயரைத் தட்டினால் அதன் கூடவே வில்லியம் பர்ரோஸ் பெயர் வரும்.  வில்லியம் பர்ரோஸ் யார் யார் மூலம் அந்த இடத்துக்கு வந்தடைந்தார், அவர் எழுத்தில் யார் யாருடைய பாதிப்பு இருக்கிறது என்ற பட்டியலைப் … Read more

வீடு

இன்றும் வீடு தேடி மறைமலை நகர் வரை வந்தோம். கடைசியில் பார்த்தால் மறைமலை நகரிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரம் உள்ளே கோவிந்தாபுரம் என்ற குக்கிராமத்தில் இருந்தது வீடு. ஆனால் அங்கே வைஃபை கூட இல்லை என்பதால் இப்போது அம்பத்தூர் செல்கிறோம். வீடு பார்க்கத்தான். மைலாப்பூரில்தான் 1,70,000 ரூ மாத வாடகை கேட்கிறார்களே கொடூரர்கள்? வேறு என்ன செய்ய? பின்குறிப்பு: இந்தக் காரணத்தினால் இன்றைய கட்டுரை இன்று நள்ளிரவில்தான் பதிவேற்றம் செய்யப்படும்.

ஏன் தினமும் எழுதுகிறீர்கள்?

என் நண்பர் ஒருவர் என் வாட்ஸப்பில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். எழுதிய நேரம் இரவு 11.43. ”உங்களை நிரூபிக்க என்ன தேவை இருக்கிறது சாரு… ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஒரு ரெண்டு நாள் எழுதுங்கள், போஸ்ட் பண்ணாதீர்கள். வீட்டில் நீங்க பாட்டுக்கு இருங்கள். எழுதி எழுதி போஸ்ட் போடனும்னு எந்த அவசியமும் இல்லை. ஒரு பத்து நாள் அமைதியாக இருங்கள் .. எல்லாரும் தேடி வருவார்கள், இல்லயா ஒரு **## இல்லை.. சாரு தப்பாகச் சொல்லிருந்தால் மன்னிச்சிருங்க.. … Read more