அடையாளம்

இலக்கிய நிகழ்ச்சிக்கானஓர் அழைப்பிதழைக் கண்டேன்பதினெட்டு பெயர்களுக்கு முன்னால்எழுத்தாளர் எனவும்நான்கு பெயர்களுக்கு முன்னால்கவிஞர் எனவும்போட்டிருந்ததுஎழுத்தாளரை எழுத்தாளர் என்று போடாமல்நடிகர் என்றோ டாக்டர் என்றோவாபோட முடியும்?எழுத்தாளர் எழுத்தாளர்கவிஞர் கவிஞர்இதில் என்ன அக்கப்போர்? எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்ததுஇப்படி எழுதியது தெரிந்தாலேஅது தற்கொலை பண்ணிக் கொள்ளும்எங்கள் வீட்டில் ஸோரோ இருந்ததுஎன்றுதான் சொல்ல வேண்டும்எழுத வேண்டும்ஸோரோவின் தர்க்கம் என்னவென்றுயூகிக்க முடிகிறதுநான் நாய்தான்ஆனால்எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறதே? சரி, பெயரைப் போட்டுத்தானேஎழுத்தாளர் என்று போடுகிறோம்?இல்லை,ஸோரோ ஒப்புக்கொள்ளாதுநாய் ஸோரோ என்று சொன்னாலேபாய்ந்து குதறி விடும்நாய் … Read more

பார்வை

தெருநாய் குரைத்ததுஏன் குரைக்கிறாய் என்றேன்பின்னே நிலவைப் பார்த்துத்தெருநாயென்றால்குரைக்காமல் என்ன செய்வேன்என்றது

ஒன்றுமில்லை

இரண்டு தினங்கள் கழித்துப் பேசினேன் ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது’‘ஒன்றுமில்லை’ இதயத்தை பாரம் அழுத்தியது சிறிய மௌனத்துக்குப் பிறகு தொடங்கினேன் ஹைடேக்கர்காலத்தை எப்படி மனித இருப்போடுஇணைக்கிறார்ஒரு பொருள் ஏன் இருக்கிறதுஏன் அது இல்லாமல் இல்லைஒரு குறிப்பிட்ட பொருளின் இருப்புஅது இருக்கும் காலத்தால்தானேஅர்த்தம் பெறுகிறது… ’ஏய் ஏய் நிறுத்துநான் விளையாடுவதேயில்லையென்றுநீதான்புகார் செய்கிறாய்விளையாடினால் கோபித்துக் கொள்கிறாய்என்னதான் செய்யட்டும், சொல்’என்றாள் சிரித்தபடி 2. நகரில் பல சிரிப்புப் பயிற்சி மையங்களைக்கண்டிருக்கிறேன்வயதானவர்களெல்லாம் அங்கேசிரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்பார்த்தால் நமக்கு அழுகை வரும்அது வேறு விஷயம் அம்மாதிரி … Read more

பிரார்த்தனை

1 பேரரசன்இரு மல்யுத்த வீரர்களைத்தோளில் சுமந்து மலை ஏறுபவன்மகன் மரணத்தின் விளிம்பிலிருந்தான்பேரரசன் வேண்டினான்‘என் உயிரை எடுத்துக் கொள்மகன் உயிரை விட்டு விடு’ மகன் பிழைத்தான்பேரரசன் நோய்மையில் வீழ்ந்துஆறு மாதத்தில் மறைந்தான் 2 வெர்னர் ஹெர்ஸாக்ம்யூனிச்சில் இருந்தான்தோழி பாரிஸில், மரணத்தின் விளிம்பில்சில மணி நேரங்களே கெடு’சாவதற்கு முன் உன்னைப் பார்க்க வேண்டும்’என்கிறாள் தோழி பனிப்பொழிவினூடேஅவன் நடந்தான்இருபத்திரண்டு நாட்கள்பாரிஸ் வந்துஅவளைப் பார்த்தான்தோழிஒன்பது ஆண்டுகள் உயிருடனிருந்தாள் 3 சாமான்யரும் பிரார்த்தனை செய்யலாமாஎனக் கேட்டாள் பிறிதொரு சமயம்அவள் சொன்ன சம்பவம் இது:அவளுக்கு வாகனம் … Read more

புரிதல் குறித்த சமன்பாடுகள்

உன்னை ஏன் என்னால்புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைநீ புரிந்து கொள்ள வேண்டுமானால்அரை நூற்றாண்டு நீ பின்னே செல்ல வேண்டும்.என்னை நீ ஏன்புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைநான் புரிந்து கொள்ள வேண்டுமானால்அரை நூற்றாண்டு நான் முன்னே செல்ல வேண்டும்.அதற்கான கால எந்திரம் நம்மிடம் இல்லை.புரிதல் சாத்தியமில்லைஎன்பதை மட்டும் புரிந்து கொண்டதால்புரிந்து கொள்ள முடியாததைபுரிந்து கொள்ள முடியாதஇடத்திலேயே விட்டு விட்டுவந்து விட்டேன்.வா, புரிந்ததைப் பேசுவோம்புரிந்ததை ஆற்றுவோம் 2 நீ மேசையில் காபி கோப்பையை வைத்தாய்.நான் ஜன்னல் பக்கம் பார்த்தேன்.வெளியே மரங்கள் … Read more

குட்பை

இதுவரையாருக்கும் எதற்கும்குட்பை சொன்னதில்லைஆனால்மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள் இப்போதுமுதல் முதலாகச்சொல்கிறேன்கவிதையேநீ ஒரு நதிஎன் ஆன்மாவின் கரையில்நானும் நீயும் ஒன்றானோம்உன் சொற்கள்நிலவொளியில் நடனமிடும் நிழல்களாகஎன் மௌனத்தை உடைத்தன ஆனால் இன்றுஉன் உற்சாகம்உன் கொண்டாட்டம்உன் மகிழ்ச்சிஏன், உனது கண்ணீர்கூடஒரு கணத்தில் மறைகிறது அவள் சொன்னாள்’எனக்காக ஒரு கவிதை’இதோ ஆயிரம் எழுதி விட்டேன்ஆனால்உன் எடைஅவளை அழுத்துகிறதுகுற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது உனக்காக உயிரையும் தருவேனெனஉன் காதலியிடம் கதறுகிறாய்ஆனால்எனக்கோ ஹாய் சொல்ல ஒரு பெண்ணில்லைதற்கொலை உணர்வைமதுவினால் தள்ளிப் போடுகிறேன்என்கிறான் நண்பன் இன்னொருவனோஇவன் காதல் கவிதைகளில்தஞ்சமடைந்து விட்டானெனஇரங்கற்பா எழுதுகிறான் … Read more