மொழி வழி

நினைப்பதைச் சொல்ல
மொழி
நானும் சொல்லி வந்தேன்
நினைப்பதையே
எழுதி வந்தேன்
அப்படித்தான்
நம்பி வந்தேன்
எல்லோரும் என்னை
நிர்வாண மனிதன் என்றார்கள்
ஆனால்
உன்னிடம்
வார்த்தைகள்
உறைந்த பனியாய் நிற்கின்றன

எல்லோரிடமும்தான்