மலர்வனமானது மனம்

அவள்
சொல்வது செய்வது
எல்லாமே
மன உளைச்சல்
மன அழுத்தம்
தந்து
மனதை ரணகளமாக்கியது

எல்லாம் புதிது
இதுவரை கண்டதில்லை
கேட்டதில்லை

ஓடவும் முடியாது
முதல்முதலாய்க் கண்ட தெய்வம்

ஒருநாள் ஞாபகம் வந்தது
அவள் சொன்னது
’நீ என்னைக் குழந்தையாய்
நடத்து’

நடத்தினேன்
மலர்வனமாயிற்று
மனம்