கருணை கொள், இறைவி!


காதை அறுத்துக் கொடுத்தானாம்
கழுத்தை அறுத்துக் கொடுத்தானாம்
எல்லாம் தெரியும்
நீ இல்லாவிட்டால்
நான் செத்து விடுவேனென
உனக்குத் தெரியுமா இல்லையா
சொல்
தெரிவதற்காக நான் செத்தால்
உன்னைப் பார்க்க முடியாது
அது ஒன்றே என்னைத்
தடுக்கிறது
இல்லாவிடில்
அதையும் செய்து முடிப்பேன்
என் தங்கமே