ரிஷியிடமிருந்து ஒரு கடிதம்

டியர் சாரு,

நான் கோவா போகவில்லை. ஆரோவில் அருகிலேயே தங்கிவிட்டேன். பெண்கள் பெண்கள் என்று அலைந்தது போதும்! என்னுடைய Art Exhibition நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவோமென்று முடிவு செய்தென். இன்று ஆரோவில் உள்ளே நடக்கும் ஜிப்ஸி Festivalக்கு சென்றிருந்தேன். உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கர்ண கொடூரம். இசையும் பயங்கர Amature!சுற்றிலும் அழகிகள். அந்த அழகிகளை பிடிப்பதற்கு இளைஞர் கூட்டம் போட்டிப் போட்டு கொண்டிருந்தது. ஒரு பக்கம் மரண மொக்கையான இசை குழு பாடி கழுத்தை அறுத்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் பார்த்தேன். ஏற்கனவே வோட்காவாயை Pulpi Orangeல் Mix செய்து எடுத்து சென்றிருந்தேன். செம்ம போதை. இவர்கள் செய்யும் போலித்தனமான கூத்து சகிக்கவில்லை. எழுந்து என்னுடைய எலக்ட்ரிக் சைக்கிளை எடுத்து கொண்டு Barக்கு விட்டேன. பாரில் குடி பிரியர்களின் சண்டை, கேளிக்கை, சத்தம் கேட்டபின் தான் என் மனம் ஒருவிதமாக அமைதியுற்றது. இரண்டு பியர் வாங்கி கொண்டு போதையில் Street Light இல்லாத ரோட்டில் வெறித்தனமாக ஒட்டி வந்து வீடு சேர்த்தேன். உங்களை வாசிக்க ஆரம்பித்த பிறகுதான் இசையில், திரைப்படம், கலை என்று என் ரசனை மேம்பட்டது. அதனால்தான் இப்படியான எலீட் கும்பல் நடத்தும் கேலிக்கூத்துகளை என்னால் சகிக்க முடியவில்லை. விளைவு வழக்கம் போல் வீட்டிற்கு வந்து இருட்டில் குடித்து கொண்டிருக்கின்றேன். என்னுடைய தோழி ஒருத்தி வான் கா பைத்தியம். கையில் Starry Night Tattoo குத்தியிருக்கிறாள். ஒரு முறை போதையில் சொன்னேன், வான் காவையை விட பெரிய ஓவியனாக என்னால் ஆக முடியும் நீ என்னுடன்
இருந்தால். போடா பைத்தியம் என்றாள்!
வான் காவைப் பற்றி யாருக்கும் தெரியாது. செத்த பிறகு இன்று இளம் பெண்கள் வான் கோ பைத்தியமமாக அலைகிறார்கள். விசித்திர உலகம் சாரு! நான் யாரிடம் இதையெல்லாம் பகிர முடியும்? உங்களிடம் தான். முட்டாள்கள் முட்டாள்களுடன் கூடி குலவட்டும். என்னால் முடியாது. நவம்பரில் நடக்க இருக்கும் என்னுடைய ஓவிய கண்காட்சியில் காட்டுகிறேன். தனியாக கையடித்து செத்தாலும் பரவாயில்லை. இந்த அசிங்கமான விளையாட்ட என்னால் விளையாட முடியாது. அதனால் தான் இருட்டில் உட்கார்ந்து குடித்து கொண்டிருக்கிறேன்.

ரிஷி