பெண்களும் கடவுளும் ஒன்று
கருணையற்ற கூட்டம்
எழுதியின்னும் ஈரம் காயவில்லை
அடுத்துவொரு ப்ளூ டிக் கவிதையை
அனுப்பி விட்டான்
எல்லாம் என்
தலையில் ஓத்த விதி
இன்று சுந்தர் சருக்கையுடன் சந்திப்பு
அதனால் அவர் புதினத்தைத்
தேர்வுக்குப் படிப்பது போல்
ப்டித்துக்கொண்டிருந்தேன்
அதற்கிடையில் வந்தது
ப்ளூ டிக் பூதம்
எனக்கு வாட்ஸப்பில்
569 நண்பர்கள்
அவ்வளவு பெயரையும்
தனித்தனியாய் எண்ணியது
தனிப்புராணம்
569இல் 549 பேர்
ப்ளூ டிக்கை மறைத்துள்ளார்
எனக் கண்டேன்
சிலரை விசாரித்தேன்
மருத்துவர் ஶ்ரீராம்
நோயாளிகள் தொல்லை
யென்றார்
‘என் பிள்ளைக்கு
வாந்தி நிற்கவில்லை
நீங்கள் என் மெஸேஜைப்
பார்த்து விட்டும் பதில் அனுப்பவில்லை’
தச்சுத் தொழில் புரியும்
மூர்த்தியைக் கேட்டேன்
கஸடமர் தொல்லையென்றார்
ராஜேஷைக் கேட்டேன்
அவனும் அதே பதில்
ஆனால் பல பேர் சொன்ன
பதில்
கணவன் தொல்லை
மனைவி தொல்லை
இவளுக்கு யார் தொல்லையென
மனம் OCDயில்
மாட்டியது