பெரிய பிழை

ஒரு வாசகி கடிதம் எழுதியிருக்கிறார். சென்ற கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தது Culotte இல்லையாம். அதன் பெயர் wrap skirt. சுருக்கமாக, wrap என்று சொன்னால் போதும். Draped skirt என்றும் ஒன்று உள்ளது. ஆனால் அது வேறு; wrap வேறு. இரண்டுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது. நீங்களே கள ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களின் ஆடை விஷயத்தில் இது போன்ற பிழைகளை இதுவரை செய்ததில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பே தாங், ஜி ஸ்ட்ரிங் பற்றியெல்லாம் எழுதி புரட்சி செய்தவன், இன்று போயும் போயும் ஸ்கர்ட் விஷயத்தில் பிழை செய்திருக்கிறேன். பெண்களின் உலகிலிருந்து பெரிதும் விலகியிருக்கிறேன் என்று தெரிகிறது.

wrap skirt
culotte