மகிழ்ச்சியான வாழ்க்கை: ஓர் உபதேச மஞ்சரி

மேற்கண்ட தலைப்பில் கடந்த ஏழெட்டு தினங்களாக அமர்ந்து ஒரு குறுநாவல் எழுதினேன். கட்டுரையாகத்தான் எழுதினேன். ஆனால் சீனி இது ஒரு குறுநாவல் என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனால் அதில் சில பல நகாசு வேலைகளைச் செய்து இப்போது அதை முழுமையான குறுநாவலாக மாற்றி விட்டேன். இன்னும் ஓரிரு வாரங்களில் அது நம் தளத்தில் ஒரே நாளில் வெளியாகும். அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்துப் போடுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரே அத்தியாயத்தில் இதை நிறுத்தச் சொல்லி அழுத்தங்கள் வரலாம். அதனால் ஒரேயடியாக முழுமையாக வெளிவந்து விடும். இது ஒரு அதிரடி நாவலாக இருக்கும். முதல் அத்தியாயத்தில் நாட்டு வெடிகுண்டாக இருந்தது முடிவில் ballistic missileஆக மாறி விட்டது என்றார் நண்பர் ஒருவர். ஸ்ரீராம் இது என் ஐம்பது ஆண்டு எழுத்து வாழ்வின் சாரம் என்று வர்ணித்தார். மற்றபடி அவர் வார்த்தைகள் நாவலிலேயே கடைசியில் வரும். கொஞ்சம் காத்திருங்கள்.

நவம்பர் எட்டு நிகழ்ச்சிக்காக ஐரோப்பியத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.