ஐரோப்பிய சினிமா – ஓர் அறிமுகம் : 4

பாண்டிச்சேரியில் நவம்பர் 8 அன்று மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மூன்று நண்பர்களைத் தவிர வாசகர் வட்டத்திலிருந்து வேறு யாரிடமிருந்தும் எந்த சலனமும் இல்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவரை நாற்பது பேர் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். சென்ற முறை அமெரிக்காவிலிருந்து இருபது பேர் கட்டணம் செலுத்தி ஒளிப்பதிவு விடியோவைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த முறை ஒரே ஒரு நண்பர்தான். இது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நண்பர்கள் இது குறித்து ஆர்வமுள்ள மற்ற நண்பர்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஸ்ரீராம் மட்டுமே ஆர்வத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். வேறு யாரிடமிருந்தும் எந்த சலனமும் இல்லை. நவம்பர் 8 நிகழ்ச்சி பற்றி சினிமா ஆர்வலர்களுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். நானும் இது பற்றிய ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட இயலாது. வேலை நெருக்கடி. நீங்கள் நிகழ்ச்சிக்கு வர முடியாவிட்டாலும் ஒளிப்பதிவு விடியோவை அனுப்பி வைக்க முடியும். மற்ற விவரங்களை இதற்கு முந்திய அறிவிப்பில் தெரிவித்திருக்கிறேன். இப்போது கட்டணம் செலுத்து முடியாதவர்கள் பெயர் விவரம் மட்டும் தந்து விட்டு நேரில் வந்தும் கட்டணம் செலுத்தலாம்.

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com