நாளை (எட்டாம் தேதி, ஜனவரி) மாலை ஐந்து மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன். ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். அரங்கு எண் எஃப் 19.
வருடா வருடம் தொடர்ந்து எழுதியும் சென்ற ஆண்டும் சில பூமர் எழுத்தாளர்கள் என்னைப் பார்த்ததும் “ஏன் டல்லா இருக்கீங்க சாரு?” என்று கேட்டார்கள். இந்த ஆண்டும் அப்படிக் கேட்டால் மறுநாள் அது பற்றி அவர்களின் பெயர் போட்டு என் ப்ளாகில் எழுதுவேன். அப்படிக் கேட்பதை உருவ கேலி என்றே எடுத்துக் கொள்கிறேன். யாருக்கும் யாரையும் அப்படி உருவ கேலி செய்ய உரிமை இல்லை. மகிழ்ச்சியான ஒரு விழாவில் இப்படியான எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு வாருங்கள். மேலும் ஒரு வேண்டுகோள். என்னை எழுத்தில் வசை பாடி மகிழ்பவர்கள் என்னை நேரில் பார்க்கும்போது சிரித்து வைக்காதீர்கள். அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமானம்.
