ஆண்டவன் கட்டளை

செப்டெம்பர் 27, 2016 ஆண்டவன் கட்டளை முதல் காட்சியே பார்த்தேன். ஆவணப் படம் போல் இருந்தது. மணிகண்டனுக்கு சுவாரசியமாகக் கதை சொல்லத் தெரியவில்லை. அல்லது திரைக்கதையில் பிரச்சினையா? ராஜேஷ்தான் சொல்ல வேண்டும். படு இழுவை. படு போர். காட்சிகள், கதை எல்லாம் எதார்த்தமாக இருந்தாலும் சுவாரசியமாக எடுத்துச் செல்லவில்லை என்றால் எப்படி அமர்ந்து பார்ப்பது? இடைவேளைக்கு மேல் படம் நன்றாக நகர்ந்தது என்று என்னால் எழுத முடியாது. அப்படியானால் முதல் பாதியை வெட்டி எறிந்து விடலாமா? பத்திரிகைகளெல்லாம் … Read more

மேகா பதிப்பகம்

அக்டோபர் 4, 2016 என் அன்புப் புதல்வர் அருணாசலத்தின் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் ஆசியும். *** அன்புமிக்க சாரு, தமிழ் மீது பற்றும், வாசிப்பின் மீது காதலும் கொண்டிருந்த எனது தந்தை திரு.ம.மேகராஜன், தன்னுடைய 84 வயதில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கை எய்தியது தங்களுக்கும் நினைவிருக்கும்.. அந்த சமயத்தில் தங்களின் ஆறுதலான வார்த்தைகளால் எனது துக்கத்தை சிறிது சிறிதாக மறந்தேன். எனது தந்தையின் பெயரால் “மேகா பதிப்பகம்” எனும் ஒரு சிறிய பதிப்பகத்தை தொடங்க … Read more

சிங்கப்பூர் விவகாரம்

செப்டெம்பர் 28, 2016 கார்ல் மார்க்ஸிடமும் ஜெயமோகனிடமும் ஒரு சந்தேகம். சூர்ய ரெத்னா போன்ற எதையுமே படிக்காத ஒருவரின் சிறுகதைத் தொகுதிக்கெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து படித்து மதிப்புரை எழுதும் ஜெ. என்னுடைய ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களுக்கு மதிப்புரை எழுத மாட்டாரா? திட்டினாலும் பரவாயில்லை. நான் ஒன்றும் பதிலுக்கு சூர்ய ரெத்னா மாதிரி this guy that guy என்றெல்லாம் எழுத மாட்டேன். எப்படி இருந்தாலும் எனக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதுவார் இல்லையா, அதை … Read more

“மௌனி தாத்தா ஒரு எழுத்தாளரா?”

தி இந்து, செப்டெம்பர் 28, 2016 ‘புதுமைப்பித்தன் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?’ கட்டுரை படித்தேன். நம் சமூகம் படைப்பாளிகளை அவரவர் காலத்தில் புறக்கணிப்பது தொடர்பாக மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். காந்தி சென்னைக்கு வந்தபோது பாரதி அவரைச் சந்திக்கிறார். அப்போது உடனிருந்த ராஜாஜியிடம் காந்தி சொல்கிறார், “இவர் உங்கள் மொழியின் சொத்து. இவரைக் கவனமாகப் பராமரியுங்கள்!” இவ்வளவுக்கும் பாரதி அவரிடம் பேசியது ஒரே வாக்கியம். காந்திக்கு ஒரு இலக்கிய மேதையைக் கண்டுகொள்ளும் உள்ளுணர்வு … Read more

ஒரு நியூயார்க்கர் கதையும் ஸீரோ டிகிரியும்

செப்டெம்பர் 28, 2016 என் எழுத்துக்களின் மூலம் நான் ஒழுங்கற்றவனைப் போல் தெரிந்தாலும் கடும் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன். என்னோடு பழகியவர்களுக்கு அது தெரியும். அது நல்லதோ கெட்டதோ, இப்படி ஒழுங்கைக் கடைப்பிடிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது. அதனால் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதுதான் அறம் என்றெல்லாம் உளற மாட்டேன். ஒருவர் ஒழுங்கற்று இருப்பதுதான் அவருக்கு வசதியாக இருந்தால் அது அவரைப் பொறுத்தவரை நல்லதுதான். சரி, அப்படி நான் கடைப்பிடிக்கும் ஒழுங்குகளில் ஒன்று, ஒரு புத்தகத்தைப் படிக்க எடுத்தால் அதை முடித்து … Read more

அனுஷுக்கு ஒரு கடிதம்

செப்டெம்பர் 29, 2016 அனுஷின் கடிதத்தைப் படித்தேன். நான் எழுதும் கருத்துக்கள் மிகை உணர்ச்சியின் குவியல்கள் என்று எழுதியிருக்கிறார். நன்றி. நான் எழுதியது ஒரு எச்சரிக்கை. என் கருத்தைப் பொருட்படுத்துவதும் தூக்கிக் குப்பையில் எறிவதும் உங்கள் விருப்பம். நான் எழுதியது எதிர் பதிப்பகத்தின் நோக்கத்தைப் பற்றியது அல்ல. தவறு செய்பவர்கள் பொறுப்பற்ற முறையில் மொழிபெயர்ப்பவர்களைத்தான். அர்ஷியாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. தலைப்பே அந்த நாவலின் அடியோட்டத்துக்கு எதிராக இருந்ததால் அதை நான் படிக்கவில்லை. ஆனால் … Read more