படிக்க வேண்டிய நூல்கள் (2)

http://charuonline.com/blog/?p=3399 இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் மேற்கண்ட இணைப்பில் உள்ள கடிதங்களைப் படித்து விடக் கேட்டுக் கொள்கிறேன்.  படித்து விட்டுத் தொடரலாம். சாரு, நான் தருணின் மூன்று நாவல்களையும் படித்து விட்டேன். அந்த மூன்றில் எனக்குப் பிடித்தது ‘The Story of My Assassins’. அதே போல் Alchemy of Desire -ல் Kama என்ற பாகத்தைப் படித்து மிரண்டு விட்டேன்.  அப்படியே உள்ளே இழுத்து விட்டது.  தருணின் மொழி மிக வசிகரமானது.  The valley of Masks … Read more

எதுவரை?

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சாரு, எனது பெயர் Fashry.  நான் இலங்கையைச் சேர்ந்தவன். தற்போது கத்தாரில் வசிக்கிறேன். உங்களது எழுத்துக்களின் தீவிர வாசகன். உங்களது நாவல்கள் ராஸ லீலா, ஃபான்ஸி பனியன் போன்றவை வாசித்து பல வருடங்கள் ஆகி விட்டன. அவை எனது வீட்டுப் புத்தக ராக்கையில் இன்னுமுள்ளன. தற்போது உங்கள் வலைத் தளத்தை தினமும் வாசித்து வருகிறேன். (நிலவு தேயாத தேசம் உட்பட ) மற்றும் நீங்கள் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தவறாமல் … Read more

ஒழுத்தாளன்

  எப்படி இருக்கீங்க சார்? நல்லா இருக்கேன்.  நல்லா இருக்கேன். ஊரின் மிக அழகான பெண் மற்றும் பாலியல்: நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல் என்ற ரெண்டு புக்ஸும் கிடைக்கவில்லை; எங்கே கிடைக்கும் சார்? டிஸ்கவரி சேனல்… இல்லை இல்லை…  டிஸ்கவரி புக் பேலஸ்ல கிடைக்கும். அங்கேயும் கிடைக்கல; நியூ புக்லேண்ட்ஸிலும் கிடைக்கல சார். சரி, மனுஷ்ய புத்திரனிடம் கேட்டுச் சொல்கிறேன். இப்போ கொஞ்ச நேரத்துக்கு மின்னே தான் மனுஷ்ய புத்திரன்கிட்ட பேசினேன்.  வரும்னு சொன்னாரு.  அந்த … Read more

சார்வாகன்

  இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி நேரத்தையும் என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.  சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் எழுத்தாளர் ஜாதி இல்லை என்று தெரிந்தது. அதற்கும் மேலே. ரமண மகரிஷியோ, ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ எழுத்தாளர்களா? அது போன்ற மகான்களோடு பேசிக் கொண்டிருந்தது … Read more

முகநூல்

மற்ற மொழிகளில் எப்படி என்று எனக்குத் தெரியாது.  ஆனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் முகநூல் என்பது வெட்டி அரட்டை என்பதாகவே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கிறது.  நல்ல முறையில் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.  என்னுடைய பள்ளியிலிருந்து உருவான பலரே இதற்கு சாட்சி. இரண்டு நாள் முன்பு மூப்பனார் போல நீங்கள் ஒரு கிங் மேக்கராக இருக்கிறீர்கள் என்று என்னைக் கிண்டல் செய்தார் ஹமீது.   அராத்து, கருந்தேள், கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ் என்று பெயர்களையும் குறிப்பிட்டார்.  இன்னும் ஒருவர் ஒளிந்து … Read more