ட்சைக்காவ்ஸ்கி

லத்தீன் அமெரிக்க சினிமாவின் நான்காம் அத்தியாயத்தை எழுதி முடித்த போது தலை பூராவும் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.  ஒயின் அருந்தலாமா என்று யோசித்தேன்.  இரவு பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதை விட்டு விட்டு கரப்பான் பூச்சிகளை விரட்ட என்ன வழி என்று பார்த்தேன்.  கிடைத்தார் ட்சைக்காவ்ஸ்கி.  மனம் பின்னோக்கிச் சென்றது.  ஊட்டியில் (குன்னூர்) ஒரு மலை முகட்டில் கட்டப்பட்ட மர வீட்டில் பிரம்மராஜனோடு விஸ்கி அருந்திய படி நடுநடுங்கும் ஜனவரி மாதக் குளிரில்  இரவு … Read more

அக்டோபர் முதல் தேதி திருவாரூரில்…

நாளை அக்டோபர் முதல் தேதி திருவாரூரில் உள்ள ராபியாம்மாள் அஹ்மது மெய்தீன் கல்லூரியில் காலை பத்து மணி அளவில் இன்றைய வாழ்வில் இலக்கியத்தின் அவசியம் பற்றி உரையாற்ற இருக்கிறேன்.  இன்று இரவு திருவாரூர் கிளம்பிச் சென்று நாளை இரவு அங்கிருந்து சென்னை ரயிலைப் பிடிப்பேன்.  நாளை ஒரு பகல் திருவாரூரில் இருப்பேன்.  திருவாரூர் நண்பர்கள் சந்திக்கலாம்.  ஒரு வாரத்திற்கு முன்பே இந்தக் கூட்டம் திட்டமிடப்பட்டாலும் சாருஆன்லைனில் தெரிவிக்க நேரம் இல்லை.  லத்தீன் அமெரிக்க சினிமா தொடர் நான் … Read more