பெருமாள் முருகன் விவகாரம் (4) : அடியேனுக்குக் கொலை மிரட்டல்

ஏதோ உள்மனதில் தோன்றியதால் தான் மாரல் சப்போர்ட் கொடுங்கள் அது இது என்று எழுதினேன்.  ஆனால் எவ்வளவு கெஞ்சியும் வாசகர் வட்ட நண்பர்கள் இரண்டே பேர்தான் வந்திருந்தார்கள்.   நான் எழுதியிருந்ததை மீண்டும் தருகிறேன்: ”இன்று 18ஆம் தேதி முன்மாலை 3.30 மணிக்கு புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் சொல்கிறேன். ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழாவின் போது நேரம் கிடைக்காத காரணத்தால் வாசகர்களுடனான கலந்துரையாடல் நடைபெற முடியாமல் போய் விட்டது. நாளைய … Read more

படமும் குரலும்…

இன்றைய தி இந்து நாளிதழில் மனுஷ்ய புத்திரனின் புகைப்படத்தைப் பார்த்தேன்.  ஒரு ஆச்சரியம்.  புகைப்படத்தில் அவர் குரல் கேட்கவில்லை.

பெருமாள் முருகன் விவகாரம் (3)

நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தேன். ஏனென்றால், தமிழ் இலக்கியச் சூழலுக்கும் எனக்கும் ஒத்தே வராது என்பதை என்னுடைய 26, 27 வயதில் வெளியான ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலிலேயே கண்டு கொண்டேன்.  அப்போதே என் மதிப்புக்குரிய நண்பர்களாக இருந்த கவிஞர் சுகுமாரன் முதற்கொண்டு அத்தனைத் தமிழ் இலக்கியவாதிகளும் அந்த நாவலைக் கொண்டாடோ கொண்டாடு என்று கொண்டாடினர்.  எனக்கோ அந்த நாவல் படு சராசரியாகத் … Read more

புத்தகக் காட்சியில் சிற்றிரங்க விவாதத்தில் அடியேன்…

ஞாயிற்றுக் கிழமை 18ஆம் தேதி முன்மாலை 3.30 மணிக்கு புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் சொல்கிறேன்.  ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழாவின் போது நேரம் கிடைக்காத காரணத்தால் வாசகர்களுடனான கலந்துரையாடல் நடைபெற முடியாமல் போய் விட்டது.  நாளைய நிகழ்ச்சியை அந்தக் கலந்துரையாடலாக மாற்றுவோம். பொதுவாக இது போன்று நான் கலந்து கொண்டு பேசும்  நிகழ்ச்சிகளில் வாசகர் வட்ட நண்பர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை என்பதை கவனிக்கிறேன்.  கலந்து கொண்டால் எனக்கு ஒரு … Read more

பெருமாள் முருகன் விவகாரம் (2)

இன்றைய தினம் அந்திமழையில் வெளிவந்த கேள்வி பதில்: பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு கிளம்பியது போல் உங்கள் எழுத்துக்கு ஏதாவது எதிர்ப்பு கிளம்பியது உண்டா? தற்போதைய விவகாரத்தைக் கவனித்தீர்களா? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? கவிமணி, சேலம். பதில்:  என்னுடைய எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பினால் ‘அப்பாடா, இப்போதாவது நம்மை இவர்கள் கவனிக்கிறார்களே, நம்மையும் ஒரு எழுத்தாளன் என்று அங்கீகரித்து எதிர்க்கிறார்களே!’ என நினைத்து சந்தோஷப்படுவேன்.   ஏனென்றால், தமிழக புத்திஜீவிகள், பிரமுகர்கள், சக எழுத்தாளர்கள் … Read more