The Ghost Bug: A Short Film by Araathu
அராத்துவின் The Ghost Bug குறும்படம் பார்த்தேன். பிடித்திருந்தது. உங்களுக்காகவும் இங்கே பகிர்கிறேன்.
அராத்துவின் The Ghost Bug குறும்படம் பார்த்தேன். பிடித்திருந்தது. உங்களுக்காகவும் இங்கே பகிர்கிறேன்.
சுருக்கமாக எழுதவே முயற்சிக்கிறேன். இப்போது நான் எழுதப் போகும் குறிப்பை என் நண்பர்கள் காயத்ரியோ ராம்ஜியோ விரும்ப மாட்டார்கள். ஏன், நானே கூட காலையிலிருந்து எழுதவில்லை. ஆனாலும் சமூக அநீதிகளைக் கண்டித்து எழுதுவதைப் போலவே எனக்கு ஒரு அநீதி நடந்தாலும் எழுத வேண்டியது என் கடமைதான் என்று நினைக்கிறேன். உதாரணமாக, டிஎம் கிருஷ்ணாவின் சமீபத்திய அட்ராசிட்டி பற்றி நாளை ஒரு பத்திரிகைக்கு எழுதப் போகிறேன். அதைப் போன்றதுதான் இப்போது நான் எழுதுவதும். அது கர்னாடக சங்கீதத்துக்கு நடந்திருக்கும் … Read more
bynge.in நண்பர்கள் ஒரு புதுமை செய்கிறார்கள். எந்தெந்த எழுத்தாளர்களின் தொடரை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் கதையோடு கூட வருகிறது. இப்போது முகநூலில் லைக் எண்ணிக்கை வருகிறது அல்லவா, அந்த மாதிரி. நான் ஏதாவது முகநூலில் எழுதினால் முப்பது லைக். அதுவே ஒரு பெண் தன் புகைப்படத்தைப் போட்டு குட்மார்னிங் ஃப்ரெண்ட்ஸ் என்று போட்டால் 2039 லைக் வருகிறது, உடனே நான் depress ஆகி விட வேண்டும். bynge.in செய்வது ரொம்ப நல்ல காரியம். இது … Read more
எளியவர்கள் பற்றி அராத்து எழுதியதன் தொடர்ச்சி இது. அராத்து எழுதியது ஒரு சமூகவியல் cum அரசியல் ஆய்வு முடிவு. நமக்கு இரண்டு இயலுமே கொஞ்சம் அலர்ஜி. ஆனாலும் கஷ்டப்பட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தால், மேட்டர் சிம்பிள். எளியவன் என்றால் கஞ்சிக்கு இல்லாதவன் என்று அர்த்தம் அல்ல. மூளை காஞ்சவன் எளியவன். அவன் அம்பானியாகவும் இருக்கலாம். அய்யம்பேட்டை அய்யாசாமியாகவும் இருக்கலாம். அப்படி ஒரு எளியவர் சமீபத்தில் என்னை முதுகில் குத்திய கதை அராத்து, காயத்ரி, … Read more
Bynge.in இல் நான் எழுதி வரும் அ-காலம் தொடரை (அப்படி ஒரு தொடர் வருவது உங்களுக்குத் தெரியுமா?) கலா கௌமுதியில் மொழிபெயர்த்துப் போடலாமா என்று கலா கௌமுதியிலிருந்து தகவல் வந்தது. அதன் ஆசிரியர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர். சமீபத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை. நான்தான் காரணம். பொதுவாக நான் மலையாளத்தில் வெளியிடுவதை ஏழெட்டு ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன். பணம் ரொம்பக் கம்மியாகத் தருகிறார்கள். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய். மாத்ரு பூமியில் மட்டும் … Read more
நேற்று எழுதிய சிறிய குறிப்பில் கடைசியில் இப்படி எழுதியிருந்தேன். ”என் கட்டுரைத் தொகுதிகளை இன்னும் விரிவாக வாசித்தீர்களானால் இந்தக் கேள்வியே எழாது. உங்கள் வயது இருபத்தைந்துக்குள் இருக்க வேண்டும். சரியா? வயதைக் கண்டு பிடித்தது உங்கள் கேள்வியினால் அல்ல. உங்கள் மெயில் ஐடியை வைத்து. சுமார் இருபது வயது இளைஞர்கள்தான் இப்படிப்பட்ட ஐடி வைத்துப் பார்க்கிறேன்.” முதலில் இருபத்தைந்து என்று எழுதி விட்டு, பிறகு, அதுவே அதிகம் என்று தோன்றி இருபது என்று இன்னொரு வாக்கியத்தைச் … Read more