மூவரின் வாசகர்கள் (Revised version)

இந்தப் பதிவை என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள் பலரும் ரசிக்க மாட்டார்கள்.  அதேபோல் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களும் ரசிக்கப் போவதில்லை.  இருந்தாலும் எனக்குத் தோன்றுவதை எழுதித்தானே ஆக வேண்டும்.  வேறு வழியில்லை.  என்னுடைய மிகத் தீவிரமான வாசகர்கள் பலர் என்னுடன் நெருக்கமான நட்பில் இருப்பவர்கள்.  விசேஷ காலங்களில் எனக்குப் புது வேட்டி சட்டை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கம்.  அதே சமயம் மதத் தீவிரவாதியின் பிடிவாதத்தோடும் உறுதியோடும் ஏதாவது ஒரு நடிகருக்கு ரசிகராகவும் இருப்பார்கள்.  ரசிகர் … Read more

என் தேர்தல் கணிப்பு

என் தேர்தல் கணிப்பு: திமுகவுக்கு 190 இலிருந்து 200 வரை இடங்கள் கிடைக்கும். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்காதிருந்தால் இன்னும் கூடுதலான இடங்களைப் பெற்றிருக்கலாம். ஸ்டாலினுக்குக் கூட்டல் கழித்தல் தெரியாது, யாகாவாரயினும் நா காக்க என்ற குறளையெல்லாம் நாப் பிறழாமல் சொல்ல வராது என்பதெல்லாம் முதல்வராக அமர்வதற்கான தகுதிக் குறைவு என்று நான் நினைக்கவில்லை. முதல்வர் பதவி என்பது கலெக்டர் வேலை அல்ல. கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை விட ஸ்டாலின் … Read more

தேர்தலில் யாருக்கு வாக்கு அளிக்கலாம்?

அன்புள்ள சாரு‌ ஐயா: தங்களின் எளிய வாசகன் நான்.  அரசியல் பற்றிய இந்த கேள்வி உங்களுக்கு சிரமத்தை அளித்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இன்னும் நான்கு  நாட்களில் தேர்தல் வர இருப்பதால் உங்கள் பதில் தமிழ் நாட்டு மக்களுக்கு  ஒரு தெளிவான சிந்தனையை வழங்கும் என மிக ஆழமாக நம்புகிறேன்.முக்கியமாக உங்கள் வாசகர்களுக்கு.தாங்கள்  உட்பட எல்லோரும் தங்களுக்கு விருப்பமான கட்சியை இதுவரை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்,பல பேர் ஒரே கட்சிக்காக வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து வாக்களிப்பார்கள்,அந்த ரகம் … Read more

எக்ஸைல் வாசிப்பு (2)

சற்று நேரத்துக்கு முன்பு ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார். இதுதானே மீரா என்று ஒரு புகைப்படத்தை அனுப்பினார். மிரண்டு போனேன். சீலேவிலிருந்து நீங்கள்தான் அனுப்பினீர்கள் என்றார். சீலே பயணக் கட்டுரையின் ஆரம்ப அத்தியாயங்களை குமுதத்திலும் எழுதினேன். அதில் இந்தக் கதை விஷயங்கள் இல்லை. ஆனால் அலெஹாந்த்ரா என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது. ரொபர்த்தோ புகைப்படம் இருந்தது. மாயமான் வேட்டையில் பழைய கோணல் பக்கங்களின் சாருவைப் பார்த்தேன் என்றார். எங்கே போய் விடும்? எக்ஸைல் போன்ற … Read more