நான்தான் ஔரங்கசீப்…தொடர்ச்சியாக ஐந்து அத்தியாயங்கள்

வாசகர்களின் வேண்டுகோளை முன்னிட்டு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் தொடர்ச்சியாக வெளிவர இருக்கின்றன. இதுவரை இரண்டு வந்து விட்டது. இப்போது (30 ஜூலை) நான்கு மணிக்கு இரண்டு அத்தியாயங்கள் வரும். நாளை (சனிக்கிழமை) மாலை நான்கு மணிக்கு ஐந்தாவது அத்தியாயம் வரும். பிறகு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வாராவாரம் ஞாயிறும் புதனும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வரும். உங்கள் எதிர்வினைக்குக் காத்திருக்கிறேன். bynge.in செயலியை ஆண்ட்ராய்ட் அல்லது ஐஃபோனில் டவுன்லோடு செய்து கொண்டால் நாவலைப் … Read more

என் பெயர் ரோஸி: சிறுகதை: வாஸ்தோ (ஒரு சிறிய முன்குறிப்புடன்…)

முன்குறிப்பு: சாரு என் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் பல பூனைகள் வசிக்கின்றன.  அதில் சில பூனைகள் தனிப் பூனைகள்.  அப்படியென்றால் recluseஆக வாழ்பவை.  என்னை மாதிரி.  அதில் ஒன்று Teddy.  தியாகராஜா, அசோகா, 1857, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நாவல்களோடு பூனைகள் பற்றி ஒரு நாவலும் முழுமையடையாமல் உட்கார்ந்து கிடக்கிறது. அதில் மற்ற விவரங்கள் வரும்.  ரெக்லூஸ் பூனைகளில் இன்னொன்று, கால் விந்தி நடக்கும் பூனை. அதற்குக் கொரோனா என்று பெயர் வைத்திருக்கிறார் செக்யூரிட்டி. சாந்தோம் நெடுஞ்சாலையில் சிக்கி கால் … Read more

நான்தான் ஔரங்கசீப்… சில எதிர்வினைகளும் என் நன்றியும்…

இரண்டாம் அத்தியாயமும் வெளிவந்து விட்டது.  படித்து விட்டுப் பலரும் எனக்குத் தனிப்பட்ட முறையில் வாட்ஸப் மெஸேஜ்களும் மின்னஞ்சல்களும் அனுப்புகின்றனர்.  எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விட்டேன்.  நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  உங்களுடைய இந்தக் கருத்துகளை bynge.in பக்கத்திலும் கதைக்குக் கீழே கருத்துகள் என்ற இடத்தில் பதிந்தால் பிஞ்ஜ் குழுவினரும் படிக்க ஏதுவாக இருக்கும். பிஞ்ஜ் டாட் இன் குழுவைச் சேர்ந்த நவீனையும் ஜனாவையும் அவர்களுக்குப் பத்து வயதாக இருக்கும் போதிருந்தே தெரியும்.  பார்கவை எப்போது பார்த்தேன் … Read more

நான்தான் ஔரங்கசீப் பற்றி…

நாவல் bynge.in செயலியில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு வெளிவந்தது.  அடுத்த அத்தியாயம் இன்று காலை ஏழு மணிக்கு வரும்.  முதல் அத்தியாயம் வந்ததும் இரண்டாவது வருவதற்குள் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளப் பெரும் ஆவலாக இருந்தேன்.  நள்ளிரவுக்குள் – அதாவது வெளிவந்து ஐந்து மணி நேரத்தில் 884 பேர் வாசித்திருக்கிறார்கள்.  இப்போது மணி காலை ஆறு ஆகிறது.  அந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது.  இது சந்தோஷத்துக்குரியதா வருத்தத்துக்குரியதா என்று தெரியவில்லை.  மூவாயிரம் பேர் … Read more

நான்தான் ஔரங்கசீப்… பற்றிக் கொஞ்சம்

இன்று இரவு ஒன்பது மணிக்கு bynge.in செயலியில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்கசீப்… நாவல் எனக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.  இதேபோல் நான் ஒரு பத்திரிகைக்காக எழுதிய நாவல் ராஸ லீலா. அது பற்றித் தமிழ் வாசகர்கள் யாருக்கும் தெரியாது.  காரணம், ஒரு காகிதத்தில் தமிழில் எழுதி அதை நெட் செண்டரில் கொண்டு போய்க் கொடுத்து தட்டச்சு செய்து, தட்டச்சு செய்யும் பெண்ணோடு அமர்ந்து பிழை திருத்தம் செய்து – என் எழுத்துக்கு அது எத்தனை … Read more

நான்தான் ஔரங்கசீப்…

இன்று (29 ஜூலை 2021) இரவு 9 மணிக்கு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் அத்தியாயம் bynge.in செயலியில் வெளியாகிறது. நாளை காலை ஏழு மணிக்கு இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறது. அதை அடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதன்கிழமையும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வெளிவரும்.