குருவும் சிஷ்யையும்… (குறுங்கதை)

இந்த ஒன்றரை ஆண்டுகளில் நேற்றுதான் முதல் முதலாக அவந்திகா வெளியே செல்கிறாள்.  சின்மயா நகரில் உள்ள அவளுடைய அம்மா வீட்டுக்கு.  மைலாப்பூரிலிருந்து தூரம்தான்.  டாக்ஸியில் போக மாட்டேன் என்று சொல்லி விட்டதால் நண்பர்கள் யாருடைய காராவது தேவை.  காரோட்டியுடன்.  ஆள் ஔரங்கசீப் மாதிரி ஒழுக்கசீலராக இருக்க வேண்டும்.  தண்ணி கிண்ணி அடித்துக் கொண்டு, நிறைய கேர்ள் ஃப்ரென்ஸெல்லாம் வைத்துக் கொண்டிருந்தால் – வேண்டாம், பெயரைச் சொல்லாமலேயே யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் – அந்த ஆள் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (19): வா.மு. கோமு

யாரு பதிவு போட்டா என்னான்ற காலத்துல இருந்து இவன் தான் போட்டான்னு உடனே தெரிஞ்சிக்கிற காலத்துல இருக்கோம்ல! ஆமா கோமு! சின்னப்பய அவன்.. வுடுங்கோ! இப்பவும் என் நட்புல பழகின நண்பரும் உங்களை எழுதிட்டே இருக்காப்டி.. ஏற்கனவே ஜெயமோகனையும் எழுதி ஓய்சிட்டாப்டி! புதுசா உங்களை பிடிச்சிட்டாப்டி! அடுத்த எழுத்தாளனை திட்டுறக்கெ நேரம் ஒதுக்கி இப்பிடி முக்கி முக்கி பதிவு போடுறாங்களே.. அவிக (இலக்கிய) எழுத்துக்கு நம்ம எழுத்துல ஒரு நேர்மை இருக்குன்னு புரிஞ்சிட்ட நாள் இன்னிக்கி தான்!

கலைஞனும் ரசிகனும்…

மேலே உள்ள இரண்டு வார்த்தைகளும் ஆண் மைய வார்த்தைகள்.  பொதுவாக நான் இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தவிர்க்கவே முயற்சிப்பேன்.  ஆனால் கலைஞி என்றால் நன்றாக இராது.  ”ன்” ஐ நீக்கி “ர்” போட்டால் வேறு அர்த்தமாகி விடும்.  எனவே மரபு ரீதியாகவே “ன்”னோடு விட்டேன்.  கலைஞன் என்ற வார்த்தை எழுத்தாளருக்கும் பொருந்தும்.  புதுமைப்பித்தன் ஒரு கலைஞன்.  ஆனால் ரசிகர் என்ற வார்த்தை வாசகருக்குப் பொருந்தாது.  வாசகர் என்பவர் என்பவர் ரசிகரை விட உசந்த நிலையில் இருப்பவர்.  எனவே மேலே … Read more

நான்தான் ஔரங்கசீப்… சந்தேகங்களும் கேள்விகளும்…

நான் தான் ஔரங்கசீப்… நாவல் பற்றிய தங்களுக்கு சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தால் அவற்றை அந்த பிஞ்ஜ் செயலியிலேயே கேட்கலாம். நான் இங்கே ப்ளாகில் பதில் தருகிறேன். அங்கே எனக்கு விரிவாகத் தட்டச்சு செய்யத் தெரியவில்லை. ஒற்றை விரலில் தமிழில் தட்டுவது கடினமாக உள்ளது. ஒரு நல்ல இஸ்லாமியர் புனித ரமலான் மாதத்தில் போர் செய்ய மாட்டாரே என்று கேட்டிருக்கிறார் நஸீர் அஹ்மத். உண்மைதான். ஔரங்கசீப் மார்க்கத்துக்கு மிக மிக உண்மையாக வாழ வேண்டும் என்று நினைத்தார். அதன்படியே … Read more

அகர முதல்வியின் முதன்மைப் புதல்வனுக்கு வந்தனம்…

காட்சி ஒன்று: நண்பர்கள் சிலர் திருவல்லிக்கேணி ஜானிஜான் கான் ரோட்டில் உள்ள ஒரு பேச்சிலர்ஸ் லாட்ஜில் ஒரு ரூமில் வைத்துத் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  காலை பதினோரு மணி.  எல்லோரும் எழுத்தாளர்கள்.  அவர்களில் அடியேனும் ஒருவன்.  மாலை ஐந்து மணி அளவில் நண்பர்களில் ஒருவர் என்னைப் பார்த்து “உங்களோட ஸீரோ டிகிரியே பிரேம் ரமேஷ் ரெண்டு பேரும் எழுதிக் கொடுத்ததுதானே?” என்கிறார்.  அவர் யார் என்றால் நான் வளர்த்தவர்.  குமுதம் படித்துக் கொண்டிருந்தவருக்கு லத்தீன் அமெரிக்க இலக்கியமும் புதுமைப்பித்தனும் … Read more