முதல் நூறு – 1

எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விடுகிறேன்.  தொகுப்பில் எதைச் சேர்க்கலாம், எதை விடலாம் என்பதை நண்பர்களின் பொறுப்பில் விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.  காதல் என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை மட்டும் தவிர்த்து விடுகிறேன்.  கே: தற்கால இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரைகள் என்ன? மூர்த்தி கமல் யாருக்கும் நான் அறிவுரை கூறுவதில்லை.  ஆனாலும் நீங்கள் கேட்டு விட்டதால் சொல்கிறேன். இப்படி அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டுத்தான் இப்படி குட்டிச்சுவராகக் கிடக்கிறோம்.  யார் பேச்சையும் கேட்காதீர்கள்.  குறிப்பாக … Read more

சொற்கடிகை – 15

ஸீரோ டிகிரி நாவல் வெளிவந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் அள்ளிக் கொண்டுதான் போகிறார்கள்.  அந்தப் புத்தகம்தான் தினமும் அதிகம் விற்கிறது.  நேற்று ஒரு பதின்பருவத்து இளைஞன் அந்த நூலில் கையெழுத்து வாங்கினான்.  நான் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ”புத்தக விழாவுக்குப் போனால் நீ எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாங்கு, ஆனால் அந்த ஸீரோ டிகிரியை மட்டும் வாங்கவே வாங்காதே என்றார்கள் என் அம்மா, அதனாலேயே இதை வாங்குகிறேன்” என்று சத்தமாகச் சொன்னான் அந்தப் பையன்.  … Read more

நூறு கேள்விகள்

நூறு கேள்விகள். ஒருவரே எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். முதல் நூறு என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடலாம் என்று ஒரு நண்பர் சொன்னார். பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது வாட்ஸப். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அனுப்பலாம். டார்ச்சர் கோவிந்தன் டார்ச்சராக ஒரு கேள்வி கேட்டு ஆரம்பித்து வைப்பார் என நினைக்கிறேன். வரவேற்கிறேன். நூறு கேள்விகளும் என் பதில்களும் புத்தகமாக வரும். … Read more

சொற்கடிகை 14: தியானம் கற்றுக் கொள்வது எப்படி?

அது ஒரு பெரிய இடம். ஒய்.எம்.சி.ஏ. மைதானம். சுற்றி வர புத்தகங்களாக இருக்கும். புத்தகங்களுக்கு நடுவே தியானம் செய்வது நம் ஜக்கி கூட முயற்சிக்காதது. ராம்ஜி, காயத்ரி, வித்யா மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார்கள். காயத்ரிக்குக் கொஞ்சம் தியானம் வராது. லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தவள் அமர்ந்து அமைதியாக தியானம் செய்யும் படி என்னிடம் சமிக்ஞை செய்தாள். பக்கத்து வீட்டில் வேடியப்பனும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மூன்றரையிலிருந்து ஏழரை வரை மகா தியானம் செய்து … Read more

சொற்கடிகை – 13

ஹொடரோவ்ஸ்கியின் புகைப்படத்தைப் பார்த்து என் ஞாபகம் வந்ததாக ரிஷி, அய்யனார், வினித் மற்றும் இன்னும் இரண்டு மூன்று நண்பர்கள் எனக்கு மெஸேஜ் செய்திருந்தார்கள்.\ ஔரங்ஸேப் முடிந்த கையோடு ஒரே வாரத்தில் ம்யாவ் என்று ஒரு இருநூறு பக்க நாவல் வரும். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எழுதி வருகிறேன். அவ்வளவாக நிறைய பேருக்குப் பிடிக்காது. ஓரிரு அத்தியாயங்களைப் படித்து இயக்குனர், ஒளிப்பதிவாளர் செழியன் நாவலுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். சீனிக்கும் பிடித்திருந்தது ஆச்சரியம்தான். அதற்கான உட்பக்கப் படத்தில் இப்படி ஒரு … Read more

சொற்கடிகை – 12: ஓஷோவின் குரலில்…

இதுதான் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் வைத்து நடந்த சம்பவம்.  சம்பவத்துக்கும் பதிப்பகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  ஒளிப்பதிவு அங்கே நடந்தது.  அவ்வளவுதான்.  ஒரு தொலைக்காட்சியின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர் என்னை அழைத்தார்.  அழைத்து ஒரு வாரம் இருக்கும். புத்தக விழா சம்பந்தமா உங்கள்ட்ட ஒரு பைட் எடுக்கணும் சார்.  உங்கள் புத்தகங்களில் ஒரு ஆறு புத்தகம் பற்றிப் பேச வேண்டும் சார். என்னது, ஆறு புத்தகமா? ஆமாம் சார், ஆறு இல்ல அதுக்கும் மேல வேணும்னாலும் … Read more