அந்தத் தேன் அத்தனை நிஜம்

கருவிலேயே கலைத்துவிட்டிருக்கலாம் எனக் கெக்கலித்தது குரல் ஏறிட்டுப் பார்த்தேன் குடி பெருங்குற்றம் குடிப்பவர்களை நான் வெறுக்கிறேன் என்றது மீண்டும் அந்தக் குரல். பெண்களோடு பேசாதே பெண்களோடு பழகாதே பெண்களோடு உறவாடாதே என்றது இன்னொரு குரல் நீர்ச்சலனம் பேரலையாகி இரைச்சல் மிகுந்தது பீதியில் நான் ஓலமிட்டேன் ஊளையிடும் நாய்களை அடித்துக் கொல்லுங்கள் என்றது மற்றுமொரு குரல் என் தோளிலொரு தேன் சிட்டு அமர்ந்தாற் போலிருந்தது அன்றைய தேடலின் தேனோரு துளியைப் போனால் போகிறதென்று என் உதட்டு நுனியில் தீற்றிவிட்டுச் … Read more

வேறென்ன சொல்லட்டும், சொல்லுங்கள்? – சாரு நிவேதிதா & ஆத்மார்த்தி

எல்லாமே நாளுக்கு நாள் கூடுகின்றனஎன்றேன்.என்னையறியாமல் அப்படிச் சொல்லிவிட்டேன்.சொன்னேன் என்பதைவிட அந்தச் சொற்களை சப்தமாக நினைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.அதெப்படியோ அவளுக்குக் கேட்டுவிட்டிருக்கிறதுஎன்ன சொன்னாய் திரும்பச் சொல் என்கிறாள் இப்படி ஆரம்பித்த எத்தனையோ முத்தத்தில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி ஆரம்பித்த எத்தனையோ மூர்க்கத்தில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி ஆரம்பித்த எத்தனையோ முற்றிருளில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி முடிந்த எத்தனையோ முத்தத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது தயை தயாளம் கருணை அருள் சகிப்புத்தன்மை எல்லாமும்தான்நாளுக்கு நாள் கூடுகின்றன என்றேன்பிறகு என்றாள்தேடல் தொடர்தல் அணைத்தல் அடைதல் பற்றுதல் … Read more