எத்தனை நாள் கிடந்த வாழ்வு

கவிதை என்னைத் தேடி வரவில்லை நானும்  தேடிப் போகவில்லை ஆனாலும் எப்படியோ சந்தித்துக் கொண்டோம் தாமதம்தான் சற்றுமுன் நடந்திருக்கலாம் எல்லாமே கொஞ்சம் முன்னால் நடந்திருக்கலாம்தான் உன் காயங்களுக்கு மருந்திடுவதற்காகவே வந்தேன் என்றது கவிதை என்ன காயமோ என்ன மருந்தோ பசித்த ஒரு நாயின் அழுகுரல் என் அமைதியைத் துளைக்க இறைச்சித் துண்டுகளை எடுத்துக் கொண்டு குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன் ஒரு துணுக்கைக் கூட விடாமல் விழுங்கியது நாய் எத்தனை நாள்  நொந்த பசி எத்தனை … Read more

சொற்கடிகை : 26. நண்டுக் குழம்பு

சுமார் ஆறு வயதிலிருந்து நண்டுக் குழம்புக்கும் எனக்குமான உறவு தொடங்குகிறது.  அசைவத்திலேயே எனக்கு ஆகப் பிடித்தது நண்டுக் குழம்புதான்.  நண்டு வறுவலை விட குழம்புதான் இஷ்டம்.  எல்லாவற்றிலுமே அப்படித்தான்.  உருளைக் கிழங்கு போன்ற ஒன்றிரண்டு ஐட்டங்கள் மட்டுமே வறுவல் பிடிக்கும்.  மற்றபடி எல்லாம் குழம்புதான்.  கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நண்டு சாப்பிடாமல் ஏக்கமாகப் போய் விட்டதால் அவந்திகா போரூர் ஏரியில் பிடித்த பெரிய உயிர் நண்டுகளை ஒரு நண்பர் மூலமாக வாங்கி வரச் சொல்லி, அந்த … Read more

இன்றைய கவிதை: கனவில் வந்த பிள்ளையார் எறும்பு

சொன்னால் நம்ப மாட்டாய்நேற்று நீயென் கனவில் வந்தாய்இதோ இப்போதென் முன்னே தோன்றுகிறாய்கனவில் வருவதற்கு முன்உன்னைப் பற்றியெனக்குஎதுவுமே தெரியாதுகேள்விப்பட்டதோடு சரிதற்செயல் நிகழ்வாயிருக்க சாத்தியமில்லைகனவில் எத்தனையோ வரும் போகும்ஒரு பிள்ளையார் எறும்பு வருமாஅப்படியே வந்தாலும் மறுநாளேநேரில் தோன்றுமாஅதை விடுநீ வெகுவேகமாய் எங்கோ செல்கிறாய்சற்றே கொஞ்சம் நின்று என்னுடன் சௌக்கியம் பேசு என்ன அதிசயம் என்றால்உன் கூட்டாளிகள் இல்லாமல் தனியாகச் செல்கிறாய் இப்போது உன்னைப் பார்க்கும்போதுஎன் வாழ்நாள் பூராவும் நீஎன்னோடு இருந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்இருந்தும் இல்லாதிருந்திருக்கிறாய்அதனாலேதான் கனவில் தோன்றினாய் உன் … Read more