right here waiting…
https://www.youtube.com/watch?v=S_E2EHVxNAE
https://www.youtube.com/watch?v=S_E2EHVxNAE
18. உங்கள் முகமலர்ச்சிக்குப் பயன்படுத்தும் க்ரீம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சொல்ல முடியுமா? நிர்மல், கத்தார். பதில்: முகமலர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றற்றிருத்தல் என்ற பசை. முகப் பளபளப்புக்குப் பயன்படுத்தும் பசையை வெளியே சொல்லக் கூடாது. உங்களுக்கு மட்டும் வாட்ஸப் பண்ணுகிறேன். பொதுவாக இதையெல்லாம் நாமே கண்டு பிடித்து விடலாம். புத்தக விழா நடந்து கொண்டிருந்த போது இயக்குனர் வஸந்தைப் பார்த்தது பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அவர் போட்டிருந்த வாசனைத் திரவியத்தின் பெயரைச் சொல்லி “அதுதானே?” என்றேன். … Read more
அன்பரே, நான் ஜக்கியை விடப் பெரிய ஆள். நான் சொல்லவில்லை. மஹா பெரியவர் சொல்கிறார். ஆன்மீகவாதிகளை விட எழுத்தாளர்களும் கவிகளும்தான் பெரியவர்கள் என்கிறார் அந்த ஞானி. ஒரு மொழியையும், கலாச்சாரத்தையும், நிலத்தின் அடையாளத்தையும் காப்பாற்றுபவர்கள் எழுத்தாளர்களே என்கிறார் அவர். இப்படி நான் எழுதியிருந்தேன். இதற்கு முன்பு எழுதியிருந்த ஒரு சின்ன சம்பவத்தை இங்கே மீண்டும் எழுதுகிறேன். அவர் ஒரு ஜோதிடர். தனக்கு வந்த பணத்தை மட்டுமே வைத்து ஒரு கோவிலே கட்டியிருக்கிறார். வசூலித்த பணம் அல்ல. தன் … Read more
குடிக்க மாட்டான், ஆனாலும் ஆறேழு லார்ஜ் போட்ட மாதிரியே கண்கள். எல்லாம் சிந்தனையும் தத்துவமும் தந்த போதை. புகைக்கவும் மாட்டான். பெண்கள்? மூச். ஹலோ சொல்லும் பெண்களிடமும் மிலோராத் பாவிச் தெரியுமா ப. சிங்காரம் தெரியுமா என்று பயமுறுத்தி விரட்டி விடுவான். மூன்று மாதம் பழகிய பெண், உன்னை நெனச்சா பயமா இருக்குடா என்று பிரேக் அப் பண்ணி விட்டது. எங்கள் ஊர்க்காரன். இந்தக் காலத்து இளைஞனிடம் காணும் எந்த அடையாளமும் இல்லாதவன். என் காலத்துக்குப் பிறகு … Read more