ஔரங்ஸேப் 100 விழா பேருரை பற்றி நிர்மல்

அதிகாரம் குறித்தும், அதைப் புரிந்து கொள்வதிலும், அதிலிருந்து எப்படி தப்பிக்க என்பது போன்றவற்றைக் குறித்து இங்கு பேசப்படும் பல செய்திகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்தைக் கொண்டிருப்பவர் சாரு. இன்னும் சொல்லப் போனால் அதிகாரம் குறித்து மிக நுணுக்கமாக, மைக்ரோ லெவலில் உள் மனதளவில் உரையாடுவது சாருவின் எழுத்துக்களில் ஒரு அங்கம்.  எல்லோரும் அதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என்று சொன்னால், அது ஏதோ ஒரு அரசியல் அல்லது பொருளாதார அரசியல் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என எடுத்துக் கொள்வோம். சாரு … Read more

புரவி – கலை இலக்கிய மாத இதழ்

என் நண்பர்கள் கார்த்திகேயன் – அருண் இருவரும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் வாசகசாலை அமைப்பின் சார்பாக மேலும் ஒரு செயல்பாடு புரவி கலை இலக்கிய மாத இதழ். அச்சு இதழ்களெல்லாம் இணையத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் அச்சு இதழாக – அதிலும் மாத இதழாகக் கொண்டு வருவதற்குப் பெரும் துணிச்சல் வேண்டும். கார்த்திகேயனைக் கேட்ட போது தான் பார்த்து வந்த வேலையைக் கூட இதன் பொருட்டு விட்டு விட்டதாகச் சொன்னார். இவர்களைத் தமிழ் இலக்கிய வாசகர்களும் … Read more

ஒண்ணு ரெண்டு மூணு… இருபத்து மூணு

ஒண்ணு ரெண்டு மூணு என்ற பதிவின் தொடர்ச்சி இது.  இன்னும் ஒரு மாத காலத்துக்கு என் வாழ்வில் எப்போதும் இருந்து வரும் ஒழுங்கு இருக்காது.  உதாரணம் சொல்ல வேண்டுமானால், எப்போதும் போன் வந்தால் எடுத்து விடுவேன்.  எடுக்க முடியாவிட்டாலும் ஒரு மணி நேரத்தில் திரும்ப அழைத்து விடுவேன்.   அம்மாதிரி தினப்படி ஒழுங்கு ஒரு மாதம் இருக்காது.  ஔரங்ஸேப் நாவலை பதிப்பகத்திடம் கொடுக்க வேண்டும்.  இப்போதைய வேகத்தில் செய்தால் பதிப்பகத்திடம் கொடுக்க ஒன்றரை ஆண்டு ஆகும் என்பது எனக்கு … Read more

இரண்டாம் கடவுள்

பற்றை விடு விடுதலை பெறு ததாகதர் கண்ட ஞானம் தேன்சிட்டு சொன்னது ஒரு ஞானம் யாரும் யாரையும் முழுமை செய்ய முடியாது என் பங்குக்கு நானுமொரு ஞானம் சொன்னேன் என் ஆவியை வார்த்தையாக்கித் தருகிறேன் இலக்கியத் திருட்டு என்றது தேன் சிட்டு விவிலியத்தின் நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம் அப்படியானால் நான் இரண்டாம் கடவுள் என்றேன்