ஏன் கவிதை எழுதுகிறாய்?

ஏன் கவிதை எழுதுகிறாய்  என்றார் சிலர்நானெங்கே எழுதுகிறேன்,கவிதைதன்னைத் தானேஎழுதிக் கொள்கிறதுநானென்ன செய்ய என்றேன்அதனிடமே கேள் என்றார்கள்தன்னைத் தானே எழுதிக் கொண்டகவிதையிடம் ஒருநாள் கேட்டேன்கவிதையெழுதுவது எப்படி எனசிறகை விரி காற்றில் பறஎன்றது கவிதைஎனக்கு சிறகில்லையே என்றேன்இல்லாத சிறகை விரி, அஃதே கவிதைஎன்று சொல்லிவிட்டுப்பறந்தது கவிதை

25. சொற்கடிகை

இந்த இடத்துக்கு வந்து நாட்கள் பல ஆகி விட்டன.  காரணம், மிக அவசரமான வேலை.  ஆங்கிலப் பதிப்பாளர் ஔரங்ஸேபின் அத்தியாயவாரியான சுருக்கம் கேட்டிருந்தார்.  அதைத்தான் எழுதி அனுப்பி வைத்தேன்.  எழுதுவது மிகப் பெரும் சவாலாக இருந்தது.  இதற்கிடையில் வினித்தின் பிறந்த நாள் வந்து போனது.  முந்தின தினம் மாலை சந்திப்புக்கு என்னை அழைக்கலாம் என்று நினைத்ததாகச் சொன்னான் வினித்.  சென்றிருந்தால் இரவு முழுதும் பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.  ஆனால் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது வினித் என்றேன்.  … Read more

சென்னை கோடையும் ட்யூரின் குதிரையும்…

கோடை தொடங்கி விட்டது மனிதர்கள் வியர்வையில் குளிக்கிறார்கள் குளிக்கும்போதே வியர்க்கிறது எங்கும் சூடு எதிலும் சூடு காற்றும் சுடுகிறது நீரும் சுடுகிறது இரவும் சுடுகிறது நிலவும் சுடுகிறது மனிதர்களும் சூடாகவே இருக்கிறார்கள் சூடாகவே பேசுகிறார்கள் எங்கு பார்த்தாலும் அனல் பறக்கிறது சென்னை எப்போதுமே இப்படித்தானென அலுத்துக் கொள்கிறார்கள் சென்னைவாசிகள் ஐரோப்பியப் பனிப்பாலையில் சிக்கிக் கொண்ட குதிரை ஒன்று தன் பலத்தையெல்லாம் திரட்டி இழுத்துச் செல்கிறது ஒரு வண்டியை

ஞானம்

வனம் வானம் நட்சத்திரம் மேகம் அண்ட சராசரம் கடல் காற்று குன்று பாறை மலை விருட்சம் அருவி நதி மிருகம் பிராணி புழு பூச்சி பூக்கள் பறவை மீன் மழை மண் புயல் இடி மின்னல் குழந்தை புனித நூல் சாக்கடை கோவில் சங்கீதம் சிற்பம் ஓவியம் இலக்கியம் பெண் தீர்க்கதரிசி அசுரர் தேவர் கடவுள்கள் யாரும் எதுவும் யாருக்கும் எதற்கும் ஒருபோதும் கற்பிப்பதில்லை தேடுபவன் கண்டடைகிறான்