சொல்

எறும்பின் காலம் வேறு மனிதனின் காலம் வேறு பட்சிகளின், நட்சத்திரங்களின் காலம் வேறு.இது யார் சொன்னது எனக் கேட்டது பக்கத்து வீட்டுப் பலவர்ணக் கிளி. காலத்தைப் பேசியவரின் பேர் சொன்னேன்அதற்கும் எனக்குமிடையே சொற்களின் வழியே ஒரு சிநேகிதம் மலர்ந்தது வளர்ந்தது மலர்வதற்கு நட்பு என்ன மலரா வளர அதுவொரு கொடியா என்றது பஞ்சவர்ணம் பேரை மாற்றாதே அடையாளமிழந்து என்னால் வாழ முடியாது என்று கத்தியது கிளி  முன்பு வாழ்ந்த பேருக்கு இது பரவாயில்லை எனத் தலையசைத்தது.ஒருநாள் எங்கள் தத்துவ உரையாடலின் … Read more

இன்றைய வெனிஸ் மாநாடு

இன்று வெனிஸில் நடக்க இருக்கும் அறிவியல் – கலை மாநாடு பற்றி நேற்று எழுதியிருந்தேன். இந்தியாவிலிருந்து இரண்டு நரம்பியல் நிபுணர்கள் அங்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸில் பணி புரிபவர்கள். இலக்கியத்தில் நான். போயிருக்கலாமோ என்று நேற்றிலிருந்து யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஸல்மான் ருஷ்டி மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அலெக்ஸாந்தர் க்லூஜை சந்தித்து அளவளாவியிருக்கலாம். பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன். ஔரங்ஸேப் முக்கியம். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். … Read more