22 ஏப்ரல் வெனிஸில் என் சிறுகதை வாசிப்பு

Fondazione Prada அமைப்பின் ஓவிய – சிற்ப – இலக்கிய விழா நாளை மாலை வெனிஸில் தொடங்குகிறது.  எனக்கு அழைப்பு இருந்தும் ஔரங்ஸேபை முடிக்க வேண்டியிருப்பதால் நான் செல்லவில்லை.  உலகம் முழுவதிலும் இருந்து 32 எழுத்தாளர்கள் இந்த விழாவுக்காகவே எழுதிய புதிய கதைகளை நாளை ஜார்ஜ் கைடால் வாசிக்கிறார்.  இதில் ஹானான் அல்-ஷேக்கின் ஒரு கதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  அலெக்ஸாந்தர் க்லூஜ் மிக முக்கியமான எழுத்தாளராக உலகம் முழுதும் அறியப்பட்டவர்.  கண்காட்சி நவம்பர் வரை இருப்பதால் பிறகு … Read more

இன்னொரு கவிதை: மகிழ்ச்சி

நீ நினைப்பதுபோல் நான் மகிழ்ச்சியாக இல்லை என்றாள் மகிழ்ச்சி என்றேன் பிறிதொரு நாள் இவ்வுலகில் நீதானென் ஒரே மகிழ்ச்சி உன்னை ஒருக்கணமும் பிரிந்திருக்க சம்மதியேன் என்றாள் மகிழ்ச்சி என்றேன் இப்போது மகிழ்ச்சி குறித்து நானும் முதல்முறையாக யோசிக்க ஆரம்பித் திருக்கிறேன்

இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மீனாட்சி எனும் சாதகப் பட்சி

1வருகை________கருப்புத் தோல் பரட்டைத் தலை அழுக்கு வேட்டிவியர்த்த உடல்காலில் செருப்பில்லைஒருகையில் ஜோசியக் கிளிக்கூண்டுஇன்னொரு கையில்இரண்டாக மடித்த பிளாஸ்டிக் விரிப்பு“ஐயாவுக்குத் தான் ஜோசியம் பார்க்கணும்” என்றுஎன்னைக் காட்டிச் சொன்னார் நண்பர்தலைக்கு அம்பது ரூபாய் எனவிலை வைப்பது போல்கட்டணத்தைச் சொன்னவாறே“தாராளமாகப் பார்க்கலாம்” என்றபடிவிரிப்பை விரித்து  அமர்ந்தான் கிளி ஜோசியன் (2)வாக்கு______“அம்மா மீனாட்சி, ஐயாவுக்கு ஒரு சீட்டு எடு”கதவு திறந்து வெளியே வந்துகட்டிலிருந்து ஒரு சீட்டெடுத்துக் கொடுத்தாள் மீனாட்சிஎன்ன படமோ எது பார்த்தானோ“திருஷ்டி இருக்கிறது ஐயா, நிறைய திருஷ்டி இருக்கிறதுஅந்த திருஷ்டியை … Read more