சூர்யதாரையை விழுங்கியவனைப் பற்றிய குறிப்பு

சூர்ய தாரையின் ஒரு துளியை ருசித்து விழுங்கினேன் அதன் பிறகு நடந்ததோர் அதிசயம் நினைத்த நேரத்தில் பறக்க முடிந்தது நினைத்த நேரத்தில் தேவர்களுடனும் கடவுள்களுடனும் தீர்க்கதரிசிகளுடனும் பேய் பிசாசுகளுடனும் பேச முடிந்தது பெண்கள் என்ன நினைக்கிறார்களென புரிந்து கொள்ள முடிந்தது மிருகங்களோடும் உறவாட முடிந்தது பசி மறந்தது உறக்கம் தொலைந்தது துக்கம் சந்தோஷம் கண்ணீர் சிரிப்பு மரணம் ஜனனம் விருப்பு வெறுப்பு வலி சுகம் இன்பம் துன்பம் நல்லது கெட்டது மலம் மூத்திரம் சந்தனம் பன்னீர் தென்றல் … Read more

ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையை அறிமுகப்படுத்தினான் நண்பன் அப்படி ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை ஆனாலும் அவனிடம் ஒரு வசீகரம் இருந்ததை உணர்ந்தேன் அவன் முகமே ஒரு வசீகரம் அவன் குடி ஒரு வசீகரம் ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு என்றால் மேடையில் ஒரு கலயம் இருக்க வேண்டும் அதி குடியால் வாந்தி வரும்போது உதவும் கலயம் இனிமேல் குடித்தால் சங்குதான் என்றார் மருத்துவர் சரியென்று சொல்லிவிட்டு மீண்டும் குடித்தான் ப்யூக் அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள் … Read more